விவசாயத் துறைகளை ஊக்குவிக்கும் பட்ஜெட்

விவசாயத் துறைகளை ஊக்குவிக்கும்  16 அம்ச திட்டங்களை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.

விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன். அவர் கூறுகையில்

விவசாயிகளுக்கு கடன்வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

விவசாயத் துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம்கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஊரக மேம்பாட்டிற்காக ரூ 1.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டைவிட இந்த பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு ரூ 12,955 கோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

பிரதமர் கூசும் திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய்க்காக மற்றநாட்டை சார்ந்திருக்கும் நிலை கைவிடப்பட்டு சூரியசக்தி மின்சாரம் பயன்படுத்தப்படும். சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதி உதவி செய்யப்படும்.

உரங்களை சீரானமுறையில் பயன்படுத்த மத்திய அரசு ஊக்குவிக்கும். ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் உரங்களை சீரானமுறையில் பயன்படுத்துவது முக்கியமானதாகும்.

விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷிஉடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச்செல்ல வசதி ஏற்படுத்தப்படும் –

2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டுசெல்ல தனி ரயில்கள் இயக்கப்படும்.

ஆடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கு அடிபாதத்திலும் வாயிலும் ஏற்படும் நோயை 2025-இல் ஒழிப்பதே இந்த அரசின்நோக்கம்.

2025-ஆம் ஆண்டில் 53.5 மில்லியன் மெட்ரிக்டன் பால் உற்பத்தியை 103 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.

விவசாய கிடங்குகள், குளிர்சாதன சேமிப்பு மற்றும் பிற பொருள்களின் சேமிப்பகங்களை மேப்பிங், ஜியோ டேக்கிங் செய்வதற்கான முயற்சியை நபார்டு மேற்கொள்ளும்.

கிராம சேமிப்பக திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இது முழுக்கமுழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களை அதிகளவில் சேமிக்க உதவும். தளவாட பொருட்களின் செலவை குறைக்கும். இதற்கு அந்த கிராமத்தில் உள்ள பெண்கள் முழு பொறுப்பேற்பர்.

விளைப் பொருட்களைக் கொண்ட தோட்டக் கலைத்துறை உணவு தானியங்களின் உற்பத்தியை தாண்டுகிறது. எனவே ஒரு உற்பத்தி, ஒருமாவட்டம் என்ற வகையில் கொண்டுசெல்வோம்.

மீன் வளத் துறையில் இளைஞர்களை இந்தஅரசு ஈடுபடுத்தும். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சாகர் மித்ராக்கள் போல் பணியாற்றுவர் என நம்புகிறோம். அதுபோல் மீன் பண்ணை நிறுவனமும் தொடங்கப்படும் உள்ளிட்ட திட்டங்களை நிர்மலா அறிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...