தற்போதைய வழக்கப்படி, வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் வரிசெலுத்த தேவையில்லை. அதேபோல் அவர்கள் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கும் வரி செலுத்துவதில்லை. உதாரணமாக வெளிநாட்டில் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் இந்தியாவில் வரிசெலுத்த மாட்டார்கள். அதேபோல் அந்தவருவாய் மூலம் இந்தியாவில் தொழில்செய்தால், இந்தியாவிலும் அவர்கள் வரி செலுத்த மாட்டார்கள்.
இந்த நிலையில்தான் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமானவரி விதிப்பது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்பு நிறைய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பிற்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். அதில் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்திற்கு இங்கு வரிகிடையாது என்று கூறியுள்ளார். அவர்கள் எங்கே வேலை பார்க்கிறார்களோ அங்கே வரிகொடுத்தால் போதும். இங்கே அளிக்க வேண்டியது இல்லை.
மத்திய கிழக்கு நாடுகளில் சிலவற்றில் வருமானவரி கிடையாது. அப்படி வருமான வரி இல்லாதவர்களும் இந்தியாவில் வருமானவரி அளிக்க வேண்டியது இல்லை. ஆனால் உள்நாட்டில் இருக்கும் சொத்துக்குவரி விதிக்கப்படும். உதாரணமாக உள்நாட்டில் வீடு இருந்து, அதை வாடகைக்கு கொடுத்தால் வரி வசூலிக்கப் படும். உள்நாட்டில், வெளிநாட்டு பணத்தையே வைத்து தொழில்தொடங்கி, லாபம் பார்த்தால் அதற்கும் வரி வசூலிக்கப்படும்.
இதன் மூலம் வரி அதிகம் வசூலிக்கப்படும் என்று நிதி அமைச்சக கூறுகிறது. இந்த புதிய விதி முறை இந்த நிதி ஆண்டில் அமலுக்கு வரும் .