டெல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்

அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான்தயார் என்றும், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறஉள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் அரசான ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக. உள்ளிட்ட கட்சிகள் தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் பாஜக.வினருக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ”நாளை மதியம் 1 மணிக்குள் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்கவேண்டும் என்று சவால் விடுத்தார். மேலும் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளரிடம் எத்தகைய விவாதத்திற்கும் தான்தயாராக உள்ளதாக கூறினார். இவ்வாறு முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்காவிட்டால் மீண்டும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் சவாலுக்கு தான்தயார் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது குறித்து அமித்ஷா பேசியபோது:

அரவிந்த் கெஜ்ரிவால், எங்களை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி கூறியிருக்கிறார். மேலும், விவாதம் நடத்தத்தயார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை. நேரத்தையும், இடத்தையும் சொன்னால்போதும். பா.ஜ.க. உறுப்பினர்கள் அங்கு விவாதிக்கவருவார்கள். முதல்வரைப் பொருத்தவரை டெல்லி மக்கள்தான் எங்கள் முதல்வர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...