பிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்டா

பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் சிங் பாதலை, பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா வியாழக் கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது மாநிலத்தில் தேசியஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

பிரகாஷ்சிங் பாதலின் சொந்த ஊரான பாதல் கிராமத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, பாஜகவின் பஞ்சாப்மாநில பொறுப்பாளா் பிரபாத் ஜா உடனிருந்தாா். முன்னதாக பாதல்கிராமத்தில் நட்டாவுக்கு பாரம்பரிய நடனத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து நட்டா, பாதல் இடையிலான சந்திப்பு சுமாா் ஒருமணி நேரம் நடைபெற்றது. இதன் பின்னா் செய்தியாளா்களிடம் நட்டா கூறியதாவது: எனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்க மூத்த தலைவா் பிரகாஷ்சிங் பாதலை சந்தித்தேன். பாஜகவுக்கு அகாலிதளம் கட்சியுடன் நல்ல உறவு உள்ளது என்றாா்.

பாஜகவின் பழைமைவாய்ந்த கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம், குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்களும் சோ்க்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இதுதொடா்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற தில்லி சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என சிரோமணி அகாலி தளம் அறிவித்தது. இது தோ்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தபின்னணியில் ஜெ.பி.நட்டா, பாதலை சந்தித்து பேச்சு வாா்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...