ஒருவர் பதவிக்கு முயற்சி செய்யலாம். முடிவு தெரிந்து விட்டால் முதலில் சென்று வாழ்த்துபவர்களும் அவர்களே

பாஜகவில் அமைப்புக்கு என்று ஒருபிரிவு, அரசியலுக்கு என்று ஒருபிரிவு உள்ளது எனவும், இதுபோன்ற ஒருதிட்டம் ரஜினி மனதில் இருக்கலாம் எனவும் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஆசிரியர் சங்கத்தின் புதுச்சேரி கிளைசார்பில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான கருத்தரங்கம் இன்று (மார்ச் 13) புதுவை தமிழ்சங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இல.கணேசன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் ரஜினியின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பாகக் கேட்டதற்கு இல.கணேசன் கூறியதாவது:

“பாஜகவில் அமைப்புக்கு என்று ஒருபிரிவு, அரசியலுக்கு என்று ஒருபிரிவு உள்ளது. நான் அமைப்பிலிருந்து வந்தேன். பின்னாளில் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னைத் தேர்தலில் நிற்கப்பணித்தார்கள். தீனதயாள் உபாத்தியாயா எங்களது அகிலபாரத தலைவராக இருந்து அமைப்பை பலப் படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஆட்சிக்கு வருவதற்கு வாஜ்பாய் போன்றவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

இந்தத் திட்டத்தின் படிதான் பாஜக செயல்பட்டுவருகிறது. இதுபோன்ற ஒருதிட்டம் ரஜினி மனதில் இருக்கலாம். அதனை அவர் வெளிப்படுத்தியுள்ளார். எதுவாக இருந்தாலும் அவர் கட்சிதொடங்கிய பிறகுதான், அது எப்படி செயல் படுகிறது என்பதை பார்க்கமுடியும். முதலில் கட்சிதொடங்கட்டும். அதன்பிறகே இவை எல்லாம் மக்களுக்குப் புரியவரும்”.

தமிழக பாஜக தலைவராக முருகன் நியமிக்கபட்டதற்கு மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்களா என கேட்டதற்கு, “தமிழக பாஜக தலைவர்கள் குறித்து பத்திரிகையில் வந்த பெயர்ப்பட்டியலை பலர் கற்பனையாக எழுதி இருந்தார்கள். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். அவர் நியமிக்கபட்டதில் கட்சியினர் திருப்தியாக உள்ளனர். எனக்கு எந்தவருத்தமும் இல்லை. ஏனென்றால், நான் இந்த ரேஸில் இல்லை.

பாஜகவில் இருப்பவர்கள் சன்னியாசிகள் அல்ல. ஒருவர் ஒருபதவிக்கு வர வேண்டும் என்ற ஆசை இருக்குமானால், அந்த ஆசை பாஜகவில் இருப்பவர்களுக்கும் உண்டு. ஆனால், மற்றகட்சிக்கும் பாஜகவுக்கும் இருக்கும் வேறுபாடு என்னவென்றால், ஒருவர் பதவிக்கு முயற்சிசெய்யலாம். ஆனால், முடிவு என்று தலைவர் அறிவித்து விட்டால், யார் பதவிக்கு விரும்பினாரோ அவர்தான் முதலில் சென்று தலைவராக அறிவித்த நபருக்கு மாலைபோடுவார். இதுதான் பாஜகவின் விசேஷத் தன்மை” என்று இல.கணேசன் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அ ...

வறுமை ஒழிப்புக்கு சொத்துரிமை அவசியம் – பிரதமர் மோடி 'உலகம் முழுவதும் சொத்துரிமை ஒரு பெரிய சவாலாக உள்ளது, ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர ...

ஒடிசா மாநில அரசுடன் சிங்கப்பூர் அதிபர் ஒப்பந்தம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்ச ...

பிப்ரவரி 1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் பிப்.1ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறைய ...

இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறையின் வளர்ச்சி : ரத்தன் டாட்டாவை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு தொழிலதிபர் ரத்தன் டாடா ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் த ...

பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறந்துவைப்பு பெங்களூருவில் அமெரிக்க துணை தூதரகம் திறக்கப்பட்டது. இப்போதைக்கு விசா ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...