1. நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல்குளங்களும் மூடப்படுகின்றன. மாணவர்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கவேண்டும்.
2. கல்விநிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். ஆன்லைனில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கலாம்.
3. தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவேண்டும்.
4. பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை வீடியோகான்பரன்ஸ் மூலம் நடத்த வேண்டும்.
5. ஓட்டல்கள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் உடனுக்குடன் செய்யபடும். கைகள் கழுவதற்கு ஓட்டல்கள், விடுதிகளில் கூடுதல்வசதிகள் செய்யவேண்டும்.
6. திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் மட்டும் நடத்தப்படவேண்டும். புதிய நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது.
7. உள்ளூர் விளையாட்டுபோட்டி நிகழ்ச்சிகளை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும்.
8. பொதுமக்கள் அதிகம்கூடும் வகையில் ஆன்மிக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யக் கூடாது.
9. வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்கவேண்டும். சந்தைகளில் பொதுமக்கள் நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
10. அனைத்து வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் ஒருமீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடுசெய்வது நல்லது.
11. பொதுமக்கள் தேவையில்லாமல் பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும்.
12. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சிறுவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்ற அறிவுரையை டாக்டர்கள் வழங்க வேண்டும்.
13. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கை குலுக்க வேண்டாம். பாசத்துடன் கைபிடிப்பதையும் தவிர்க்கவேண்டும்.
14. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டும். எங்கிருந்து என்ன பொருட்கள் வாங்குகிறீர்கள் என்பதில் கவனம்தேவை.
15. கொரோனா வைரஸ் தொடர்பான தேவையற்ற வதந்திகளை நம்பவேண்டாம். வாட்ஸ்அப்பில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதிகாப்பது நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |