பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு குறித்தும் ஏற்பாடுகள் குறித்தும் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் பொழுது அனைவரும் ஜனதா கர்ஃப்யூ (janata curfew) முறையை பின்பற்ற வேண்டும் என்றுதெரிவித்தார். janata curfew ஜனதா கர்ஃப்யூ என்றால் என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கர்ஃப்யூ (curfew):
ஆங்கிலச் சொல்லான கர்ஃப்யூ என்பதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் அல்லது கட்டுப்பாட்டுக்குள் இருத்தல் அல்லது ஊரடங்கு என்று சொல்லலாம் .
ஜனதா:
ஜனதா என்றால் கட்சியை குறிப்பதாக சிலர் தவறான பொருள் கொண்டு விமர்சிக்கின்றனர். உண்மையில் ஜனதா என்றால் மக்கள் என்று பொருள்.
எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி யாரும் வெளியில் வரக்கூடாது என்று தெரிவித்த பிரதமர் ஒருகுறிப்பிட்ட கால இடைவெளியையும் நிர்ணயித்தார். இப்படி குறிப்பிட்ட கட்டுப்பாட்டை குறிப்பிட்ட நேரத்துக்கு கடைபிடிக்கும் வழக்கத்துக்கு கர்ஃப்யூ என்று பெயர். இதனை மக்களே தங்கள்பொறுப்பில் செய்யவேண்டும் என்று குறிக்கும் விதமாக ஜனதா கர்ஃப்யூ என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஜனதா கர்ஃப்யூ எழும் கேள்விகளும் பதில்களும்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |