ஜெகன் ஆதரவாளர்கள் ஆத்திரம் சோனியா காந்தி கொடும்பாவி எரிப்பு

ஜெகன் ஆதரவாளர்கள் ஆத்திரம் சோனியா காந்தி கொடும்பாவி எரிப்புகாங்கிரஸில் இருந்து ஜெகன்மோகன்ரெட்டி விலகியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பல இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கொடும்பாவி மற்றும் படங்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சித்தூர், அனந்தபூர், விஜயவாடா போன்ற இடங்களிலில் காங்கிரஸ் அலுவலங்கள் தாக்குதலுக்குள்ளாகின. மேலும் பல இடங்களில் காங்கிரஸ் அலுவலகங்களுக்கு எதிரே போராட்டங்கள் நடைபெற்றன

ராஜசேகர ரெட்டியினால் காங்கிரஸ் கோட்டையாக மாற்றபட்ட கடப்பா மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நேற்று காலை நுழைந்த ஜெகன் ஆதரவாளர்கள். அங்கிருந்த பொருள்களையும், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர் , சோனியா காந்தியின் படங்களை அவர்கள் கிழித்து எரிந்தனர்.

இந்நிலையில் நிருபர்களிடம் பேசிய ஜெகன்மோகன்ரெட்டி,

எனது தந்தையின் மறைவுக்கு பின் கட்சி என்னை அவமதிக்க தொடங்கியது. ரோசையாவை முதல்வராக ஆக்கியதை நான் எப்போதும் எதிர்த்தது இல்லை . ஆனால் நான் எதிர்ப்பது போன்ற பிரமையை உருவாக்கினார்கள். தொடர்ந்து காங்கிரஸ்-மேலிடம் என்னை புறக்கணித்து வந்தது. சோனியாவை சந்திக்க தொடர்ந்து பல முறை முயன்றும் எனக்கு நேரம் ஒதுக்கபடவில்லை.

அத்துடன் எனது குடும்பத்துக்கு உள்ளேயே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இந்த காரணங்களால் தான் காங்கிரசில் இருந்து விலகினேன் யான கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...