தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த நாளாக ஆண்டுதோறும் மே தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது உலகெங்கும் பரவியுள்ள தொற்று நோயினால் பற்பல தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகெங்கும் நடைமுறையில் உள்ள ஊரடங்கினால் தொழிற்சாலைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளதால் உலகெங்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர் .
ஆனால் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தலைமையிலான மத்திய அரசு செம்மையாக செயல்பட்டு வருவதால் உலகத்திலேயே பாரதத் திருநாட்டில் தான் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது நிவாரணங்கள் வழங்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது உலகின் வல்லரசான அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கூட இலவச உணவிற்காக காரில் வந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. அந்நிலை நம் நாட்டில் நிலவாமல் இருப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் செம்மையான நடவடிக்கைகளே காரணம் ஆகும். நேற்றைய தினம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தத்தம் சொந்த வீடுகளுக்கு திரும்ப மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் சுமார் 50 லட்சம் அத்தகைய தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது அவர்களுக்கு மே தினத்தில் மகிழ்ச்சியான, ஆறுதலான நிகழ்வாக அமையும் என நம்புகிறேன்.
உலகப் பேரிடர் காலத்தில் வெளிநாட்டு மக்கள் அரசின் உதவிகளை மட்டுமே நம்பியிருக்கும் நிலை நீடிக்கிறது ஆனால் மனிதாபிமானமும் சமூக ஒற்றுமையும் நிறைந்த நம் நாட்டில் சேவை மனப்பான்மை கொண்ட மக்கள், தாங்களாகவே முன்வந்து அக்கம் பக்கத்து ஏழை-எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கி வருவது நமது நாட்டின் பாரம்பரிய பெருமையை உலகிற்கு உணர்த்துகிறது..
உழைப்பையும் சுய தொழில் முனைவையும் மூலதனமாகக் கொண்ட பல கோடிக் கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றுநோய் மாபெரும் சவால் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. உழைப்பையே மூலதனமாகக் கொண்ட நமது தொழிலாளர்கள் அந்த மாபெரும் சவாலை ஏற்று நோய் தொற்று காலம் முடிவடைந்த பின்னர், மத்திய மாநில அரசுகளினால் கிராமந்தோறும் கொண்டுவரப்பட உள்ள புதிய தொழில்களிலிலும் நகர்புறங்களில் வரவுள்ள புதிய தொழில் நுட்பங்களுடனான தொழில்களுக்காக தேவையான திறன்களை அரசு வழங்கும் பலவித இலவச திட்டங்கள் மூலமாக வளர்த்துக்கொண்டு புதிய தொழில்களிலும் பங்கு கொண்டும் வெற்றி பெறுவார்கள் என்பது திண்ணம்.
அவர்கள் புதுப்புது தொழில் முனைவுகளை மேற்கொண்டும் பாரதத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி உலகத்தின் முதன்மை நாடாக பாரதத்தினை மாற்றும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என அவர்களை வாழ்த்துகிறேன். தற்போதைய தேசிய பேரிடர் நீங்கி விரைவில் ,அனைத்து உழைப்பாளிகளும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் தமது வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை வேண்டி
வாழ்த்துகிறேன்.
என்றும் தேசப் பணியில்
(Dr.L.முருகன்)
மாநில தலைவர்
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |