கரோனா தொற்றுபாதிப்பில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார்.
புத்த பூா்ணிமாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி பங்கேற்று காணொலி மூலம் உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, உலகம் முழுவதும் தன்னலம் கருதாமல், பிறரின் நலனுக்காக உழைக்கும் அனைவரையும் பாராட்டுவது மிகச்சரியாக இருக்கும்.
கரோனா தொற்றில் இருந்து ஒவ்வொரு குடிமக்களையும் காக்க இந்தியா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களுக்கு உதவி, இந்திய மக்கள் வலிமையுடனும், தன்னலம் கருதாமலும் ஒன்றுபட்டு உள்ளனர். இந்தியாவின் வளர்ச்சி என்பது எப்போதும் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் மோடி தெரிவித்தார்.
மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் சா்வதேச பௌத்தகூட்டமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யபட்ட மெய்நிகா் பிராா்த்தனை நிகழ்வில் உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் உள்ள பௌத்த மதத் துறவிகள் மற்றும் அமைப்பின் தலைவா்கள் பங்கேற்றனர்.
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |