இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு

கொரோனா பிரச்னையால், பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை, அவர்களது சொந்தமாநிலங்களுக்கு அழைத்துச்செல்ல, நேற்று வரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே செய்திதொடர்பாளர் கூறியதாவது:பீஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பீஹார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வெவ்வேறு மாநிலங்களில் வேலைபார்த்து வந்தனர். தொழிலாளர்கள் போக்குவரத்து முடங்கியதால், இவர்களால் சொந்தமாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை இருந்தது. தொழிலாளர்களை மீட்க, ரயில்வே சார்பில், சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப் பட்டது.இதன்படி, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, இதுவரை, 171 சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ரயிலிலும், 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.

இந்த சிறப்பு ரயில்கள் மூலம், இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதற்கான செலவுகளை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன், மத்திய அரசு பகிர்ந்துள்ளது. குஜராத், கேரளா ஆகியமாநிலங்களில் இருந்து தான், அதிகமான தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பீஹார், உ.பி., மாநிலங்களுக்குத் தான், அதிக தொழிலாளர்கள் வந்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் சிவ் கோபால் மிஸ்ரா, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அரசியல் வேண்டாம் சிறப்பு ரயில்கள், இலவசமாக இயக்கப்படுவதாக தெரிந்தால், ரயில்வேஸ்டேஷன்களில் தொழிலாளர்கள் அதிக அளவில் கூடி விடுவர்; இது, கொரோனா பரவலுக்கு வழிவகுத்து விடும். இதனால் தான், சிறப்புரயில்களில் செல்வதற்கு தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக, ரயில்வே அறிவித்தது. கொரோனா வைரஸ் போன்ற பெரியநெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில், இதுபோன்ற அரசியல் விளையாட்டுகள் வேண்டாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...