நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தற்போதைய கள நிலவரம் மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அந்த மாநிலங்களின் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டு களில், நக்சல் நடமாட்டம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர்களுக்கு எதிராக இறுதி யுத்தம் நடைபெற்று வருகிறது.
நக்சல்களுக்கு எதிராக இதுவரை பதில் தாக்குதல்கள் மட்டுமே நடத்தப்பட்டன; சமீபகாலமாக, நக்சல்களை தேடி கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், நக்சல் நடமாட்டம் மிகுந்த மாநிலங்களில் கூட 70 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகின. இதற்கு முன் இவ்வளவு அதிகமான ஓட்டுகள் பதிவாகவில்லை. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு கோடி மக்களின் வளர்ச்சிகளை நக்சல்கள் தடுத்து உள்ளனர்.
இதன் வாயிலாக, மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் நக்சல்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே, நக்சல் அமைப்பினரை, 2026 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சமீபத்தில், சத்தீஸ்கர் மாநிலத்தில் 36 நக்சல்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |