அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிகாட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தொடக்க உரையின்போது “நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்” என்று கூறினார். முதல்வர்களின் பரிந்துரைகளை கேட்பதற்கு முன், பிரதமர் இந்தகருத்தை தெரிவித்தார். அத்துடன் கொரோனா தொற்றுக்கு இடையில் பொருளாதாரத்தை புதுப்பிக்க தேவையான விஷயங்களையும் பிரதமர் பரிந்துரைசெய்தார்.
3ம் கட்ட லாக்டவுன் மே 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி அனைத்து மாநில முதல்வர்களிடமிருந்தும் கொரோனா பாதிப்பு மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை பெறவிரும்பினார். இதற்காக இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
காணொளிகாட்சி மூலம் (வீடியோ கான்பிரன்சிங்) இந்த கூட்டத்தில் முதல்வர்களிடம் கருத்துகேட்பதற்கு முன்பு பிரதமர் மோடி பேசுகையில், தடுப்பூசி தயாரிக்கப்படும் வரை இந்த தொற்றுநோய் நீண்டகாலமாக தொடரும் என்பதால், நாம் கொரோனாவுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.
பிரதமர் தனது ஆரம்பஉரையில் வலியுறுத்திய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று பொருளாதாரத்தை புதுப்பிப்பது.. நாடுமுழுவதும் பல்வேறு இடங்களுக்கு ரயில்களை இயக்க மத்திய அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது. சில விமானங்கள் மே 18 முதல் இயக்கப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர்களின் கருத்தின் அடிப்படையில், பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
பிரதமர் தனது உரையில் எழுப்பிய மற்றொரு முக்கியமான கவலை, கிராமங்களுக்கு கொரோனா பரவுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் என்று தெரிவித்தார்.. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான புலம் பெயர்ந்தோர் மீண்டும் பீகார் திரும்பி வருகின்றனர், இதுவரை 150 புலம்பெயர்ந்தோருக்கு பீகாரில் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அவர்கள் கடந்த ஒருவாரத்தில் பீகார் திரும்பியவர்கள் ஆவர்.
அத்துடன் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களில் 90% பேர் அறிகுறியற்றவர்கள் ஆவார். பீகாரைத்தவிர, உத்தரப்பிரதேசமும் பெரிய அளவில் புலம் பெயர்ந்தவர்களை எதிர்கொள்கிறது.
பிரதமர் மோடி இன்று முதல்வர்களுடான மாநாட்டில் ஐந்து முக்கியவிஷயங்களை கூறியதாக கூறப்படுகிறது. அவை பின்வருமாறு
- கொரோனா நீண்டகாலமாக தொடரக்கூடும் என்பதால் சமூக தூரத்தை பராமரிக்கும் பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கவும் தொடரவும். அதனுடன் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
- இந்தியா அனைத்து மாநிலங்களின் ஆதரவோடு கொரோனாவை எதிர்த்து போராடியது, உலகின் பலநாடுகளை விட நாம் மிகச்சிறந்தவர்கள், ஆனால் தொற்று நோய்க்கான ஆபத்து இன்னும் குறிப்பாக கிராமங்களில் தொடர்கிறது.
- 2 மீட்டர் சமூக இடைவெளி தூரத்தை பராமரிப்பது மிகவும்முக்கியம்.
- இன்று நாம் ஒன்றாக கொரோனாவை தடுப்புபற்றி விவாதித்து இறுதி செய்வோம். உங்கள் ஆலோசனையை நான் விரும்புகிறேன்.
- கொரோனாவை கையாள்வதில் ஒவ்வொரு மாநிலமும் ஒத்துழைத்துள்ளன, ஒவ்வொரு முதல்வரும் எனக்குசமமாக முக்கியமானவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.