உலகின் சப்ளை செயினாக உருமாறும் இந்தியா-

உலகநாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்துஉலகின் அடுத்த வல்லரசு நாங்கள் தான்என்று அறிவித்து இருக்கிறது.

மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டத்தின் முக்கிய அம்சம் சுய சார்பு பொருளா தார மேம்பாடு. இந்த சுய சார்பு பொருளா தார மேம்பாடு உருவாக வேண்டும் என்றால் இந்தியாவில் உற்பத்தி அதிகரி த்து ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும்.

உள்நாட்டு நிறுவனங்கள் பன்னாட்டு நிறு வனங்களாக மாற வேண்டும் இதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது.இப்பொழுது உலக பொருளாதாரத்தை தீர்மானித்து வரும் சீனாவின் சப்ளை செயின் உடைந்து கொண்டு இருக்கிற து .இனி அது இந்தியாவில் இருந்தே உருவாக இருக்கிறது.

இந்த சப்ளை செயின் தான் ஒரு நாட்டின் தொழில் உற்பத்தியை தீர்மானிக்கிறது.ஒரு தொழில் நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால் அதன் சப்ளை செயின் சரியாக இயங்க வேண்டும்.இதில் ஏதாவது ஒன்று அறுந்து விட்டால் கூட அந்ததொழில் நிறுவனம் அவ்வளவுதான். ஒரு தொழில் சரியாக இயங்க வேண்டும் என்றால் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் சரியான இடத்தி ல் இருந்து வரவேண்டும்.

அந்த மூலப்பொருட்கள் சரியான நேரத்தி ல் கிடைக்குமாறு சரியான போக்குவரத் து வசதி இருக்க வேண்டும்.இப்படி சரியா ன நேரத்தில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்து உற்பத்தியை இயக்க சரியான தொழிலாளர்கள் இருக்க வேண்டும்.

இப்படி உருவான பொருட்களை சரியான விற்பனையாளர்களிடம் கொண்டு செல்ல சரியான முகவர்கள் இருக்கவேண்டும்.இந்த விற்பனையார்கள் தான் நுகர் வோர்களிடம் எங்கோ உற்பத்தியாகும் பொருட்களை கொண்டு சேர்க்கிறார்கள்.

இந்த சப்ளை செயின் எங்காவது ஒரு இடத்தில் அறுந்து விட்டால் அந்த நிறுவனம் காலிதான்.சீனாவின் சப்ளை செயின் கடந்த வருடம்வரை மிக அற்புதமாக இயங்கி வந்தது.ஜப்பான் தென் கொரியா நாடுகளில் இரு ந்து வரும் சரியான மூலப்பொருட்களை வைத்து சீனாவில்உள்ள தொழிலாளர்க ள் பல்வேறு பொரு ட்களாக சரியான இட த்தில் வைத்து சரியான நேரத்தில் உரு வாக்கி வந்தார்கள்.
.
இப்படி உற்பத்தி யாகும் பொருட்களை அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மன் இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் சரியான முக வர்களாக இருந்து உலக நாடுகளிடம் தங்களின் பெயர் தாங்கி நுகர்வோர்களிடம் சேர்த்து வந்தார்கள்.

ஆக உலக வர்த்தககத்தின் சப்ளை செயின் சீனாவை சுற்றியே இதுவரை இருந்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு அமெக்கா சீனாவுடன் வர்த்தக போரை ஆரம்பி த்து சப்ளை செயினின் விற்பனை என்கி ற முக்கிய வளையத்தை அறுக்க ஆரம்பித்தது.

அடுத்து கொரானா வைரசை உருவாக்கியதால் உற்பத்தி மையங்கள் மூடப்பட்டனஇதனால் தொழிலாளர்கள் வேலை இழ ந்தார்கள்.ஆக உற்பத்தி என்கிற சப்ளைசெயினின் அடிப்படை வளையமும் துருப்பிடிக்க ஆரம்பித்தது.இதனால் சீனாவுக்கு மூலப்பொருட்களை அளிக்கும் சப்ளை செயினின் முதல் வளை யங்களான ஜப்பான் தென்கொரியா நாடுகள் மாற்று ஏற்பாட்டை தேட ஆரம்பித்தன

இந்த நேரத்தில்தான் இந்தியாவின் ச ப்ளை செயினை உருவாக்கி வரும் மே னேஜர் மோடி சீனாவில் சப்ளை வளைய த்தில் இருக்கும் நாடுகளின் கண்ணில் தெரிய ஆரம்பித்தார். இந்தியாவின் சப்ளை செயினை மோடி நவீன உள்கட்ட மைப்பு மூலமாக உருவாக்கி வருவதை
அறிந்த நாடுகள் சீனாவில் இருந்து சப்ளை செயினை உடைக்க விரும்புகின்றன்.

இதில் முக்கியமான விசயம் என்னவெ னில் சீனாவின் சப்ளை செயினுடன் இணைந்து இருக்கும் நாடுகள் அனைத்து ம் சீனாவின் கொள்கைக்கு மாறான கொள்கையை உடைய நாடுகள் .இருந்தாலும் மாற்று வழி இல்லாததால் சீனாவின் சப்ளை செயினில் இணைந்து இருந்தார்கள்.

ஆனால் கொரானா வந்த பிறகு சீனாவி ன்சப்ளை செயினை உடைக்கவே அனை த்து நாடுகளும் விரும்புகின்றன்.இந்தநிலையில் அவர்களுடைய தேர்வு அமெரி க்கா ஜப்பான் தென்கொரியா போன்ற நாடுகளிடம் இணங்கி இருக்கும் இந்தியாதானே இருக்க முடியும்.

சரியான தலைமை குழப்பங்கள் இல்லாதஆட்சி .இது இரண்டும் தான் ஒரு நாட்டைதொழில் வளர்ச்சி உடைய நாடாக உருவாக்க முடியும். இது இரண்டும் இந்தியாவிற்கு மோடி ரூபத்தில்கிடைத்து இருக்கிறது.

இதனால் தான்சீனாவின் சப்ளை செயி ன் அறுந்து இந்தியாவில் விழுந்து இருக்கிறது. இந்த சப்ளை செயினை இந்தியா தலைமையில் உலகநாடுகளை இணைக்கவே மோடி 20 லட்சம் கோடிகளை அறிவித்து இருக்கிறார். இனி உலக பொருளாதாரத்தை தீர்மா னிக்க இந்தியாவில் இருந்து உருவாகும் சப்ளை செயினில் சீனாவும் ஒருவளையமாக இருக்க முடியுமே தவிர சீனாவின் சப்ளை செயினில் இந்தியா இருக்க முடியாது. ஏனென்றால் இந்த நூற்றாண்டு
இந்தியாவின் நூற்றாண்டு..

நன்றி விஜய குமார் அருணகிரி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...