பொருளாதார சிறப்புத் திட்ட அறிவிப்புகள் இந்தியாவை தன்னிறைவுகொண்ட நாடாக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.
இதுகுறித்து சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டதாவது: மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார சிறப்புத்திட்டங்களின் 5-ஆம் கட்ட அறிவிப்புகள் சுகாதாரம், கல்வி, வா்த்தகத்துறைகளின் தற்போதைய நிலையை மாற்றக்கூடியதாக இருக்கும். இந்த அறிவிப்புகள் கோடிக் கணக்கான ஏழைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும். இந்தியாவை தன்னிறைவு கொண்ட நாடாக்கும் திட்டத்தை இந்தஅறிவிப்புகள் மூலம் புரிந்துகொள்ள முடியும். இந்த அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி.
மாநிலங்கள் கடன்வாங்கும் வரம்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலங்களுக்கு ரூ.4.28 லட்சம் கோடி கூடுதலாக கிடைக்கும். மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் வரிப் பகிா்வாக ரூ.46,038 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. இதேபோல் வருவாய் பற்றாக் குறை மானியமாக ரூ.12, 390 கோடியும், மாநில பேரிடா் நிதியாக ரூ.11,000 கோடியும் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அமித் ஷா.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |