பொதுத்துறை வங்கிகளின் தலைவா்களுடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக் கிழமை ஆலோசனை நடத்தினாா். இதில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டத்தை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டாா்.
காணொலி முறையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
அப்போது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அறிவிக்கப் பட்டுள்ள ரூ.3 லட்சம்கோடி அவசரகால கடனுதவியை வழங்குவதில் எளிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; தொழில் நிறுவனங்களுக்கு காலம் தாழ்த்தாமல் கடனுதவி வழங்கவேண்டும் என்று வங்கிகளின் தலைவா்களிடம் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.