கரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள்

கரோனா தாக்குதலைக் கண்டறிய இது வரையில் 32,42,160 மருத்துவ பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன.முடக்கநிலை அமல் காரணமாக பல ஆதாயங்கள் கிடைத்துள்ளன. நோய்பரவும் வேகம் குறைந்திருப்பது, இவற்றில் முதன்மை யானதாக உள்ளது. பெருமளவிலான நோய் தாக்குதல் எண்ணிக்கையும், மரணங்களும் இதன்மூலம் தவிர்க்கப் பட்டுள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயத்தில், முடக்கநிலை காலத்தில் சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்பாடு; ஆன்லைன் பயிற்சித் திட்டங்கள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள் மூலம் மனிதவள திறன் மேம்பாடு; பரிசோதனை வசதி அதிகரிப்பு; மருத்துவ சாதனங்கள் வழங்கும் நிலை, சாதனம், ஆக்சிஜன் கிடைப்பது அதிகரிப்பு; பொருத்தமான வழிகாட்டுதல்கள் வழங்குதல், தரநிலைகள் தயாரித்தல், நோய் அறியும் பரிசோதனைகள், ரசாயன மருந்துப் பரிசோதனை நடைபெறுகின்றன.

கோவிட்-19 மேலாண்மைக்கு தேவையான சுகாதார கட்டமைபுகள் முடக்கநிலை காலத்தில் வேகமாக உருவாக்கபட்டன. 2020 மே 27ம் தேதி நிலவரத்தின்படி 930 பிரத்யேக கோவிட் மருத்துவமனைகளில் 1,58,747 தனிமைப்படுத்தல் படுக்கைகள், 20,355 தீவிர சிகிச்சை பிரிவுப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க 69,076 படுக்கை வசதிகள் உள்ளன.

2,362 பிரத்யேக கோவிட் சிகிச்சை மையங்களில் 1,32,593 தனிமைப்படுத்தல் படுக்கைகள்; 10,903 தீவிர சிகிச்சைப் பிரிவுப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்க 45,562 படுக்கை வசதிகள் உள்ளன. 10,341 தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் 7,195 கோவிட் கண்காணிப்பு மையங்களில் கோவிட் நோய் தாக்குதலைக் குணப்படுத்த 6,52,830 படுக்கைகள் உள்ளன.

மேலும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய நிறுவனங்களுக்கு மத்திய அரசு 113.58 லட்சம் என்-95 முகக்கவச உறைகள், 89.84 லட்சம் தனிப்பட்ட முழுஉடல் பாதுகாப்புக் கவச உடைகளை (பி.பி.இ.) வழங்கியுள்ளது. 435 அரசு ஆய்வகங்கள் மற்றும் 189 தனியார் ஆய்வகங்கள் (மொத்தம் 624 ஆய்வகங்கள்) மூலம் மருத்துவ பரிசோதனைத் திறன்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன.

கோவிட்-19 நோய்த் தாக்குதலைக் கண்டறிய இதுவரையில் 32,42,160 மருத்துவப் பரிசோதனைகள் செய்யபட்டுள்ளன. நேற்றுமட்டும் 1,16,041 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

நாட்டில் இதுவரையில் 1,51,767 பேருக்கு நோய்த்தாக்குதல் கண்டறியப் பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளனர். குணம் அடைந்தவர்கள் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. மரணவிகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. உலகளவில் இது 6.36 சதவீதமாக உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...