கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம்

இந்திய தொழில் துறை கூட்டமைப்பின் வருடாந்திரக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்குத்திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். கொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு விரைவில் வருவோம் எனவும் மோடி தெரிவித்தார். வளர்ச்சிக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்தும் தொழில் துறையினரிடையே மோடி ஆலோசித்துள்ளார். இந்தியாவில் எவ்வாறு அந்நிய முதலீடுகளை அதிகம்  ஈர்ப்பது, உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது எப்படி என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்க பட்டுள்ளது.

இந்நிலையில், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைமாற்றி மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை அதிகமாக்கி ஏற்றுமதியில் சிறந்து விளங்குவோம் என்று மோடி கூறியுள்ளார். மேலும், ஏசி, காலணி, தோல், ஃபர்னிச்சர் ஆகிய துறைகளில் 17 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகளை ஈர்க்கும்திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய துறைகளில் இந்திய ரூபாய்மதிப்பில் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஃபர்னிச்சர் துறையில் ரூ.75,000 கோடிக்கான முதலீடுகள் குறித்து ஆலோசிக்க பட்டுள்ளது. மேலும் இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை பெருக்க ரூ.45,000 கோடி செலவிடப் படவுள்ளது. தோல் காலணி உற்பத்தியை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடுகள் ஈர்க்கப் படவுள்ளன. ஏசி மற்றும் அது சார்ந்த பொருட்கள் சீனாவிலிருந்து அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. அதைத்தடுக்க இவற்றுக்கான இறக்குமதி வரியைப் பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஃபர்னிச்சர் உற்பத்தியை மேம்படுத்தவும் சிலகொள்கை மாற்றங்களை மத்திய அரசு மேற்கொள்ளவுள்ளது.

மேற்கூறிய திட்டங்கள் குறித்து பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளுடன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...