சீனா தனக்குத்தானே குழியைத் தோண்டி வைத்திருக்கிறது

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய சகோதர சகோதரிகளே!

மகாகவி பாரதியாரின் பாடல்கள் தரும் உற்சாகம் போல் வேறு ஏதும் இல்லை.

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா -நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.

இந்த கடைசி வரிகள் தான் பெரிதும் பாதித்தது. நமது பாரத பிரதமர் மோதி அவர்கள் தீக்குள் விரலை விட்டு தேசத்தின் தன்மானம் எனும் இன்பத்தை நாட துணிந்து விட்டார்..

” எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு தான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.” என நேற்று அறிவித்து உள்ளார்.

மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் (ஜூன் 19 மாலை 5 மணிக்கு).நாம் கொரானாவிடம் மட்டும் போராடவில்லை. கொரானா பரவலுக்கு மூலக்காரணமாக விளங்கிய சீனாவை எதிர்த்து போரிடவும் தயாராகவே உள்ளோம்.

நமது இராணுவம் மற்றும் வீரர்கள் எதிரிகளை துவம்சம் செய்யும் மனநிலையில் உள்ளனர். சீனாவை நம்மால் எதிர்க்க முடியுமா? என்ற காலம் போய் இனி சீனா நம் தாக்குதலை எதிர்கொள்ளுமா என்று கேள்வி எழுப்பும் நிலைக்கு சூழலை மாற்றி அமைத்து உள்ளார் பாரத பிரதமர்.

சீனா பெரிய நாடுதான், பொருளதாரத்திலும், ராணுவ பலத்திலும், போருக்கான செலவைத் தாக்குப் பிடிப்பதிலும் சீனா இந்தியாவை விடவும் பலமான நாடு என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் நமக்கும் சீனாவிற்கும் போர் என வந்தால் அது முற்றிலும் வேறுவிதமான ஒன்றாக இருக்கும். இந்தியா-சீனாவுக்கு நடக்கிற போராக இல்லாமல் உலகநாடுகளுக்கும் சீனாவுக்கும் நடக்கிற போராக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.

தன்னைத்தானே ஒரு வல்லரசாக எண்ணிக் கொண்டிருக்கும் சீனா தனக்குத்தானே குழியைத் தோண்டி வைத்திருக்கிறது. ஹாங்காங்கும், தைவானும் மட்டுமல்லாமல், ஜப்பான், வியட்நாம் அதற்கும் மேலாக அமெரிக்கா வரைக்கும் மூக்கை நுழைத்து அனைவரையும் பகைத்து வைத்து இருக்கிறது சீனா. நமது பிரதமரோ அனைவருடனும் நட்பு பாராட்டி வருகிறார். அதன் விளைவு தான்.

2021 மற்றும் 2022 ஆகிய இரு ஆண்டுகளுக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் non-permanent உறுப்பினராக இந்தியா தேர்வு செய்ய பட்டுள்ளது. வாக்களித்த 192 நாடுகலிளில் , 184 நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன என்றால் எத்தனை நம்பிக்கை அந்தநாடுகளுக்கு பாரதத்தின் மேல்!

சீனா எந்த வெளி நாட்டின் மீதும், இந்தியாவைத் தவிர, போர்தொடுத்து வென்றதாகச் சரித்திரம் இல்லை. இந்தியா 1962-ஆம் வருடம் தோற்றது நேருவின் கோழைத்தனத்தால் மட்டும்தான். திபெத்தை சீனா பிடித்ததும் நேருவின் கோழைத்தனத்தால்தான். மிக எளிதாக வென்றிருக்க வேண்டியதொரு போரை நேரு த் தோற்றார

அதேசீனா 1967-ஆம் வருடம் இரண்டாவது முறை இந்தியாவின் நாதுல்லா பகுதியில் படையெடுத்து உதைவாங்கி கொண்டு ஓடிய வரலாறு நமக்குச் சொல்லப் படுவதில்லை. வரலாற்று பாடங்கள் எழுதிய கம்யூனிஸ்ட்கள் உண்மைகளை மறைத்து விட்டனர்.

சீனர்கள் நேரடியாகப் போர் புரிந்த வியட் நாமிலும் தோல்வி தான் . சீனாவை ஒப்பிடுகையில் வியட்நாம் ஒரு சுண்டைக்காய் நாடு.

சீனா வில் உள்நாட்டுப் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க காத்திருக்கிறது. அதற்கும்மேலாக கோவிட் பிரச்சினை. பெரும்பாலான சீனர்கள் தங்களின் ஒரேமகனை போருக்கு அனுப்ப விரும்பமாட்டார்கள். பெரும்பாலான சீனர்களுக்கு ஒற்றை மகன்கள் மட்டுமே இருக்கிறார்கள் (one child policy காரணமாக). போரில் சீனன் இறந்தால் நிச்சயம் அது ஒருபெரும் பிரச்சினையாகக் கிளம்பும். அதனாலேயே இறப்புகளை மறைக்க பெரும்பாடு படுகிறது சீனா.

இப்படிப் பலவிதங்களிலும் சீனா சிக்கலில் இருக்கிறது. போர்வந்தால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பாதிப்புகள் அதிகம் என்றாலும் மிகஅதிகமான பாதிப்பு சீனாவுக்குத்தான் . இது நேருவின் இந்தியா அல்ல என்பதும் மோதிஜி எதிரிகளை மோதி மிதித்து விடுவார் என்றும் சீனாவிற்கு தெரியும்.

இவைகள் எல்லாம் மீறி போர் துவங்கினால் நம்தேசத்திற்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்ய நாம் தயாராகுவோம்.

” பாரத தாயை பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்! அர்ப்பணம் ஆவோம் அவள் தாளினிலே தூய மலர்கள் நாம்!

மாநில தலைவரின் இன்று ஒரு கடிதம் சிக்கலில் சீனா ! தயார் நிலையில் இந்தியா !

அன்புடன்
டாக்டர்.எல்.முருகன்
மாநிலத்தலைவர் பாரதிய ஜனதா கட்சி
தமிழ்நாடு

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...