இந்திய வெளியுறவுக்கொள்கை – ஒரு அலசல் பாகம் 1

உண்மையில் நாடு சுதந்திரம் பெற்றது முதல் டிசம்பர் 8 – 1991 ல் சோவியத் யூனியன் அதிகாரப் பூர்வமாக கலைக்கப் படும் வரை இந்தியாவுக்கென்று தனியான வெளியுறவுக் கொள்கை என்பதே இருந்ததில்லை…

சோவியத் யூனியன் சொல்வதுதான் நமக்கு வேத வாக்கு…அவர்கள் சொல்வதைச் செய்வதும் , நீட்டிய இடத்தில் கையெழுத்து போடுவதும் தான் நம் வேலையாக இருந்தது…

நேரு தம் ஆட்சி காலத்தில் யுகோஸ்லா வியாவின் மார்ஷல் டிட்டோவுடன் சேர்ந்து அணிசேரா நாடுகள் ( NAM – Non Aligned Movement ) என்ற பெயரில் கூத்தடித்தாலும் , அந்த அமைப்பே ரஷ்யாவின் கைத்தடி யாகத்தான் இருந்தது..( இன்று யூகோஸ்லாவியா என்ற நாடே கிடையாது ..குரோஷியா , செர்பியா , ஸ்லோவேனியா உள்ளிட்ட ஏழு நாடுகளாக பிரிந்துவிட்டது)…

கிட்டத்தட்ட ரஷ்யாவின் ஒரு காலனி நாடாகத்தான் இந்தியா நடந்து கொண்டது…ரஷ்யா தன் குப்பைகளை கொட்டும் ஒரு கிடங்காக இந்தியாவை பயன்படுத்தியது..(சாலையில் படியும் பனியை அகற்றும் இயந்திரத்தை பரங்கிமலைக்கு அனுப்பிவைத்த கொடுமையெல்லாம் நடந்தது..)

இப்படி இந்தியா ரஷ்யாவுக்கு அடிமைச் சேவகம் செய்தும் நமக்கு ஆபத்து நேர்ந்த காலங்களி லெல்லாம் சோவியத் நம்மைக் கைவிட்டது தான் வரலாறு …

1962 ல் நடந்த சீன ஆக்கிரமிப்பின் போது ரஷ்யா கண்டுகொள்ள வில்லை.. சமாதானப்புறா நேரு செய்வதறியாமல் திகைத்தார்…சக கம்யூனிச நாட்டுக்கெதிராக ஒரு சிறுதுரும்பை நகர்த்தவும் ரஷ்யா தயாரில்லை..ஆசியா முழுக்க கம்யூனிச ஆக்கிரப்பில் இருப்பதால் கடுப்பான அமெரிக்கா சீனாவை எச்சரித்தது… அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எப்.கென்னடியின் உத்தரவின்பேரில் அமெரிக்க கப்பல்படையின் ஏழாம் அணி இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்ததைப்பார்த்த பிறகு சீனா போர்நிறுத்தம் செய்தது…ஆயிரக்கணக்கான சதுரகிலோமீட்டர் இந்தியப்பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டன..

அடுத்து 1965 ம் ஆண்டு நடந்த இந்திய – பாக் யுத்தத்தில் இந்திய ராணுவம் கிட்டத்தட்ட லாகூரை கைப்பற்றிவிட்ட சமயத்தில் போர் நிறுத்தம் செய்யும்படி ரஷ்யா வற்புறுத்தியது..அப்போதைய பிரதமரும் அசல் தேசபக்தருமான லால்பகதூர் சாஸ்திரி போர் நிறுத்தம் செய்ய மறுத்தார். அன்றைய சோவியத் அதிபர் அலெக்சி கோசிஜினின் தொடர்ந்த வற்புறுத்தலை மறுக்க முடியாமல் போர்நிறுத்தம் செய்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வர சாஸ்திரி நிர்ப்பந்திக்கப்பட்டார்…

வேறு வழியில்லாமல் சோவியத் ஒன்றியம் தாஷ்கண்டில் பேச்சுவார்த்தைக்கு புறப்பட்டார் சாஸ்திரி …அங்கு நடந்த பேச்சு வார்த்தையில் கிட்டத்தட்ட இந்தியாவின் கையை முறுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது ரஷ்யா… மனமுடைந்து போன சாஸ்திரி அன்றுஇரவே மரணமடைந்தார்… தான் வஞ்சிக்கப்பட்டேன் என்று ஒருசிறு துண்டுச் சீட்டில் எழுதி கையில் வைத்து இருந்ததாக தகவல்…. நிச்சயம் சோவியத்தான் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்திருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன் …காரணம் , அடுத்து வந்த நேரு குடும்பத்து வாரிசுகள் ரஷ்யாவின் சம்பளம் பெற்ற வேலைக்காரர்களாக தொடர்ந்தது வரலாறு ..மித்ரோகின் ஆவணங்கள் மூலம் அவைபின்னர் உறுதி செய்யப்பட்டன …நல்ல நண்பன் என்று கருதிய இந்தியாவுக்கு சோவியத் ரஷ்யா செய்த மாபெரும் துரோகம் அது…

அடுத்து 1971ல் நடந்த வங்க தேசப்போர்…அந்தப்போரில் இந்தியா மாபெரும் வெற்றியை ஈட்டியது…கிழக்கு பாகிஸ்தானில் ( இன்றைய வங்கதேசம் ) சுமார் ஒருலட்சம் பாக்.ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர்…அவர்கள் விடுதலையை முன்வைத்து காஷ்மீர் பிரச்சினையை தீர்த்திருக்கமுடியும்… அப்போதும் ரஷ்யா இந்திய நலனுக்கு எதிராகவே செயல்பட்டது…வேறு வழியில்லாமல் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களை விடுதலை செய்தார்…ஆப்பரேஷன் சக்சஸ்..பேஷண்ட் காலி கதைதான்..

இந்திராவின் மரணத்தை அடுத்து பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியின் வெளியுறவு சொதப்பல்கள் உலகப் பிரசித்தம் ….தன் மனைவி சோனியாவை பசுபதிநாதர் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுத்ததற்காக , நேபாளத்தின் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் அளவுக்குத்தான் ராஜீவின் அரசியல் முதிர்ச்சி இருந்தது ..

.

இலங்கை பிரச்சனையில் தேவையே இல்லாமல் தலையிட்டு , அதிலும் நரசிம்மராவ் போன்ற அனுபவஸ்தர்களின் பேச்சைக் கேட்காமல் ஜே.என்.தீட்சித் , எம்.கே.நாராயணன் , பார்த்தசாரதி போன்ற அதிகாரிகளின் பேச்சை மட்டுமே கேட்டு தானும் சொதப்பி , தன் உயிரையும் இழந்தார் …

இப்படி 1947 இல் ஆரம்பித்து 1991 வரை இந்தியாவுக்கு என தனிப்பட்ட அயலுறவுக் கொள்கை இல்லாமல் ரஷ்யாவின் முகத்தைப் பார்த்தே காலம் கழிந்தது…

1991 ஆம் ஆண்டுதான் ஒரு சிறு வெளிச்சம் தோன்றியது..

(பதிவின் இரண்டாம் பகுதி நாளை…)

நன்றி சரவண குமார் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...