நுாற்றுக் கணக்கான நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங்

கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத் தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.  இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீனபடையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர் என தெரிகிறது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்ய கூடாது என்றும் கூறியிருந்தார். ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிடில் அது வரலாற்றுதுரோகம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் நூற்றுக்கணக்கான சதுர கிலோ மீட்டர்கள் இந்திய நிலப்பரப்பு சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டதை மறந்துவிட்டு, பிரதமர் மோடியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சிப்பதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மன்மோகன் சிங் அறிக்கைக்கு பதிலடியாக, பா.ஜ., தேசிய தலைவர், ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிக்கை: ராணுவவீரர்களை, மீண்டும் மீண்டும் அவமதிப்பதை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் கட்சியும் நிறுத்தவேண்டும். இது மாதிரியான நேரங்களில் மட்டுமாவது, தேசப்பற்று என்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்.ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, திட்டமிட்டு சிதைக்கப்பட்ட பிரதமர் அலுவலகத்தின் மாண்பு மற்றும் ராணுவத்தின் கம்பீரம் ஆகியவை, தற்போதைய தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது மீட்டெடுக்க பட்டுள்ளது.

பிரதமராக இருந்த போது, நுாற்றுக் கணக்கான இந்திய நிலப்பரப்பை சீனாவிடம் தாரை வார்த்தவர்தான், மன்மோகன்சிங். 2010லிருந்து, 2013 வரையில், 600க்கும் அதிகமான சீன ஊடுருவல்கள் நடந்த போது, பிரதமராக இருந்தவர் இவர்தான். தைரியமே இல்லாமல், 43 ஆயிரம் கி.மீ., பரப்பளவை, எந்தகட்சி, சீனாவுக்கு துாக்கித் தந்ததோ, அதேகட்சியை சேர்ந்தவர்தான், இந்த மன்மோகன்சிங். மன்மோகன் சிங், தன் சொந்தகட்சிக்கு, ஏதாவது புத்திமதியை சொல்வதே தற்போதைக்கு நல்லது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை மீது, ஒட்டுமொத்த இந்தியாவுமே நம்பிக்கை வைத்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...