கொரோனாவினால் உலக நாடுகள் அனைத்துமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் இதன் பாதிப்புகளை சரி செய்ய, மக்களை பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசும், பாஜக கட்சியும் பெரும்பணி ஆற்றி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 20 கோடி பேருக்கு உணவு பொட்டலங்கள் மற்றும் மோடி கிட் , முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் திணறும்போது இந்திய அதை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்று வருகிறது. கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்கள் தயாரிப்பில் உலகில் இரண்டாம் இடமும் இந்த நோயிலிருந்து மக்களைக் காப்பதில் கவனமாக செயல்பட்டதால் மிக குறைந்த இறப்பு விகிதமும் நமது சிறந்த சாதனைகள் ஆகும்.
கொரோனா நோய்த் தொற்றை கண்டறிய கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 400,
4 ஆயிரம் என்ற அளவிலேயே சோதனைகள் செய்யப்பட்டன. ஆனால், இப்போது 2 லட்சம் என்ற அளவில் பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. 125 கோடி மக்களின் வாழ்வு பொது முடக்கத்தால் காக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம், பொருளாதாரம் இவற்றைக் காட்டிலும் மக்களின் உயிர் முக்கியம். இதற்காகவே பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் நோய்த் தொற்றுக்காக மட்டுமே தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ரூ.1.70 லட்சம் கோடி அளவிலான நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டன.
இதுபோன்ற திட்டங்கள் வேறு எந்த நாட்டிலும் செயல்படுத்தப்படவில்லை. நமது நாட்டில் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு ரயில்களை இயக்கியது மட்டுமல்லாது, ரேஷன் அட்டை இருந்தாலும், இல்லாவிட்டாலும் இலவச அரிசி, பருப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் covid-19 நோயை, அதன் காரணமாக ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை எதிர்கொள்ள மோடி அரசு நிவாரணம் அளித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், முத்ரா திட்டம், அனைவருக்கும் கழிவறை வசதி செய்து தரும் தூய்மை பாரதம் திட்டம் என பல திட்டங்கள் செயல்படுத்த பட்டுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் விவகாரம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. அது ஓராண்டில் தீர்க்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அனைவருக்கும் சமநீதி வேண்டுமென 370 நீக்கப்பட்டது. இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் நடந்தன.
ஜன்தன் திட்டத்தின் மூலம் 20 கோடி பெண்களுக்கு 3 மாதம் ரூபாய் 500 வீதம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டு உள்ளது.
சிறு குறு தொழில்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி உட்பட மொத்தம் ரூ.20 லட்சம் கோடி நிவாரண ஊக்குவிப்புத் தொகை வங்கிகள் வழங்கும் வகையில் சுயசார்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு குறு தொழில் செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை பாதுகாத்து அனைவருக்கும் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முத்ரா வங்கித் திட்டத்தில் ரூபாய் 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2 கோடி பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். நரேந்திர மோடி அரசு தமிழ்நாட்டுக்கு அளித்த பங்களிப்பாக 56 புதிய ரயில்கள் விடப்பட்டுள்ளன இரண்டு விமான நிலையங்கள் தரமுயர்த்தும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. 12 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் பாம்பன் தூத்துக்குடி துறைமுக திட்டங்கள், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் கூடுதலாக 11 மருத்துவ கல்லூரிகள் என் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் மிகத்தொன்மையான அற்புதமான பெருமை வாய்ந்த தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஐநா சபையில் பாரத பிரதமர் தமிழ்மொழியின் சிறப்பு குறித்து பேசியுள்ளார் . பல்வேறு சமயங்களில் தமிழ் மொழியின் பெருமை குறித்து, திருக்குறளின் பெருமை குறித்து தமிழ் சான்றோரின் பெருமைகள் குறித்து பாஜக அரசு இந்தியா மட்டுமின்றி உலக அரங்கில் தொடர்ந்து பறைசாற்றி வருகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிதம்பரம் பாரதப் பிரதமரை குற்றம் சொல்லும் முன், தன்னைப் பற்றி ஊழலின் காரணமாகத்தான் தான் சிறை சென்றது பற்றி சிந்திக்க வேண்டும் . பாரத பிரதமரை பற்றி பேசுவதற்கு சிதம்பரத்துக்கு தகுதி இல்லை.சீனாவிடம் இந்தியாவின் பெரும்பகுதியை தாரைவார்த்ததே காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தான் என்பதை சிதம்பரம் உணரவேண்டும்
ராஜீவ் காந்தி அறக்கட்டளை சீனாவுடன் என்ன ஒப்பந்தம் போட்டுள்ளது ? எதற்காக சீனா ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது?
காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான தன் தந்தையின் அறக்கட்டளை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஏன் ராகுல் காந்தி பதில் சொல்லவில்லை?
சீனாவுடன் எல்லையில் நடந்த மோதலில் பலியான இந்திய ராணுவ வீரர்கள் இறப்பிற்கு காரணமான சீனாவிற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டுகிறேன். ஆனால் சீனாவிற்கு ஆதரவான நிலையில் இருக்கும் தன் கூட்டணியில் உள்ள ராகுலை அவர் ஏன் கண்டிக்கவில்லை ? உண்மையைத் திரித்துக்கூறி மக்களை குழப்பும் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சி ஒரு சமூக சேவை இயக்கம். தேசம் தான் பெரிது என்று உழைக்கக்கூடிய தொண்டரகள் பாஜக தொண்டர்கள். ஆபத்தான கொரோனா தொற்றுநோய் காலத்தில் மனிதநேயத்துடன் துணிந்து இன்றும் மக்களுக்கு தேவையான பொது நல உதவிகளை பாஜக தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சி மக்களுக்கு இந்த நோய்த்தொற்று காலத்தில் ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?
பாஜக ஆட்சி காலத்தில் ஒரு தமிழ் மீனவர்கள் கூட இலங்கை ராணுவத்தால் கொல்லப்படவில்லை. நரேந்திர மோடி அரசு தமிழகத்தின் மீதும் தமிழர்கள் மீதும் தமிழ் மீனவர்கள் மீதும் மிகப்பெரிய பற்று வைத்திருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பாஜக தமிழர்களின் நலன் காக்கும் கட்சி.
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு – இறையென்று வைக்கப் படும்”
என்னும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு ஏற்ப பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது.
கொரோனா கிருமியை ஒழிப்பதற்கு மத்திய அரசோடு தோளோடு தோள் இணந்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி CoVID – 19 ஐ வெற்றிகொள்ளும் தமிழக அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் திரு L.முருகன் அவர்கள் இந்த காணொளி நிகழ்ச்சிக்கு தலைமை உரையாற்றி சேலம் மாவட்டத்திலிருந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மோடி அரசு 2.0 – முதல் ஆண்டு சாதனை விளக்க காணொளி பேரணி அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரராவ் கலந்து கொண்டு பேசியது
நன்றி உதவி பிரசாத்
மாநில ஊடக பிரிவு தலைவர்
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |