புத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுக்கும் பிரதமர்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப்பிரச்சினை நீடித்து வருவதால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மற்ற ஆசிய நாடுகளிடமிருந்து ஆதரவுதிரட்டும் நோக்கில் பிரதமர் மோடி புத்தமதத்தையும், பண்பாட்டையும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது

புத்தமதம் இந்தியாவில் பிறப்பெடுத்திருந்தாலும் தற்போது பூட்டான், தாய்லாந்து, சீனா, மியான்மார், ஜப்பான், வியட்நாம், மங்கோலியா, இலங்கை, லாவோஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வேரூன்றி இருக்கிறது. நேற்று தம்மசக்கர தினத்தை முன்னிட்டு, சாரநாத்தில் புத்தர் வழங்கிய முதல் உபதேசத்தை குறிக்கும் வகையில் மத்தியஅரசு சார்பில் காணொளிக் காட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் குடியரசு தலைவர் மாளிகையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில், ஜப்பான், லாவோஸ், கம்போடியா, வியட்நாம், இலங்கை, நேபாளம், மங்கோலியா ஆகிய நாடுகளைசேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திபத்திய புத்தபிரதிநிதிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தலாய் லாமாவின் வீடியோ உரையும் ஒளிபரப்பபட்டது.

ஆனால், சீனா தரப்பிலிருந்து யாரும் இக்கூட்டத்தில் பங்கேற்க வில்லை. புத்தமத செல்வாக்கில் தற்போது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. சீனா தனது புத்தமத தலைவர்களை வளர்த்தெடுப்பதற்காக ஏராளமாக முதலீடு செய்துள்ளது. பிரதமர் மோடியோ புத்தஜெயந்தி உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பங்கேற்பதோடு, இந்தியாவுக்கும் புத்தருக்கும் இடையே இருக்கும் தொடர்புபற்றி முக்கிய இடங்களில் பேசி வருகிறார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருக்கும் புத்த யாத்திரை தலங்களுக்கு வருமாறு யாத்ரீகர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் அழைப்புவிடுத்தார். அவர் பேசுகையில், “இந்தியாவில் ஏராளமான புத்த தலங்கள் இருக்கின்றன. என்னுடையதொகுதி வாரணாசியே சாரநாத்தை உள்ளடக்கியதுதான். புத்த தலங்களுக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதில் அதிககவனம் செலுத்துகிறோம்.

குஷிநகர் விமானநிலையம் சர்வதேச விமானநிலையமாக மாற்றப்படும் என சில தினங்களுக்குமுன் மத்திய அமைச்சரவை அறிவித்தது. இதனால் ஏராளமான மக்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் குஷி நகருக்கு வரமுடியும். இதனால் பொருளாதார வாய்ப்புகளும் பெருகும்.

இன்று உலகமே மோசமான சவால்களை எதிர் கொண்டுள்ளது. இந்த சவால்களுக்கான நிரந்தரதீர்வு புத்தரிடம் இருக்கிறது. புத்தரின் கொள்கைகள் கடந்த காலத்திற்கு ஏற்றதாக இருந்தது மட்டுமல்லாமல் நிகழ்காலத்திற்கும் ஏற்றதாக இருக்கிறது. எதிர் காலத்திற்கும் நிச்சயமாக ஏற்றதாகவே இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், புத்தநியமன இலக்கியங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் ‘மங்கோலிய கஞ்சுர்’ புத்தகத்தின் ஐந்துபாகங்களை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் பிரகலாத் படேல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், மங்கோலிய தூதர் கோன்சிங் கன்பாய்டுக்கும் பரிசாக வழங்கினார்.

இப்புத்தகத்தின் ஒட்டுமொத்த 108 பாகங்களையும் அச்சடித்து மங்கோலியாவில் இருக்கும் அனைத்து புத்தமடங்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...