கொரோனாவில் இருந்து வேகமாக மீளும் நாடு இந்தியா

ஐக்கிய நாடுகள்சபை ஏற்படுத்தப்பட்டு, வரும் அக்டோபர் மாதத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதை யொட்டி ஐநா.வின் சமூக மற்றும் பொருளாதார கவுன்சில் அமர்வு இன்று நடைபெற்றது.

காணொலிகாட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், “கொரோனா வைரசின் தாக்கத்துக்கு பிறகு உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார நிலை” என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார்

அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் அனைத்து குடிமக்களுக்கு கல்வி, மருத்துவம், மின்சாரம், சத்துணவு, வீடு உள்ளிட்ட அனைத்துஅடிப்படை தேவைகளும் கிடைப்பதை உறுதிசெய்யும் நோக்கத்துடன் எனது தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டுவருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்காக மொத்தம் 40 கோடி வங்கி கணக்குகள் தொடங்க பட்டுள்ளன. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் குடிமக்கள் அனைவருக்கும்வீடு என்ற இலக்கு எட்டப்படும். மத்திய அரசின் சுய உதவிக்குழுக்களில் இடம்பெற்றுள்ள கோடிக்கணக்கான பெண்களின் மூலம் பலரதுவாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் உலக பொருளாதாரம் கடும்நெருக்கடியை சந்தித்துவரும் நிலையில், 20 லட்சம்கோடி மதிப்பீட்டில் பல்வேறு மெகா திட்டங்களை இந்தியா அறிவித்துள்ளது.

பிற நாடுகளை ஒப்பிடும்போது. இந்தியாவில் சுகாதாரமுறை சிறப்பாக உள்ளது. இதன்காரணமாக, கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை இந்தியாவி்ல் அதிகமாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளோம்.

இதன்பயனாக, உலகிலேயே கொரோனாவில் இருந்து வேகமாக மீளும்நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 150 நாடுகளுக்கு கொரோனா மருத்துவ உதவிகளை அளித்துவருகிறோம் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...