வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது

உலகிற்கு சிறப்பான எதிர் காலம் தேவைப் படுகிறது. அதற்கு நாம் ஒருங்கிணைந்து, வடிவம்கொடுக்க வேண்டும். நம் எண்ணம், சிந்தனை அனைத்தும், ஏழைகளின் நலன்களை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். தொழில்செய்ய வேண்டியதை எளிதாக்க வேண்டியது அவசியம். உலகபொருளாதார நிலையை எதிர்கொள்ள, உள்ளூர் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். அரசு நிர்வாகத்தில், இந்தியா வெளிப்படை தன்மையை கடைப்பிடித்து வருகிறது.

இன்று உலகளவில் பரவியுள்ள தொற்றுநோய், நம் திறமைக்கு சவால் விடுத்துள்ளது. ஒரு விதத்தில், இந்த தொற்று, இந்தியாவுக்கு, சர்வதேசளவில் வாய்ப்புகளையும் தந்துள்ளது. வாய்ப்புகள் நிறைந்த நாடாக, இந்தியா உருவாகியுள்ளது. தற்சார்பு திட்டத்தின் மூலம், இந்தியா, உலகுக்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி தந்துள்ளது. ‘டிஜிட்டல்’ மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை உருவாக்குதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியாவில், இணையம் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கை, முதல் முறையாக, நகரங்களை விட கிராமங்களில் அதிகரித்துள்ளது. நாட்டில், விவசாயத்துறையில் முதலீடு செய்ய, அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன. சுகாதாரத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆண்டுக்கு, 22 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துறையில் முதலீடு செய்ய, இந்தியா அழைப்பு விடுக்கிறது.

மருந்து உற்பத்தி துறையில், இந்தியாவும், அமெரிக்காவும் நெருக்கமான நட்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்தியாவில், சுகாதாரத் துறையில் முதலீடு செய்ய, இதுவே சிறப்பான நேரம். இந்தியா, இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், இதில் முதலீடுசெய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேபோல், விமான போக்குவரத்து துறையும் வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது.

இதிலும், முதலீடு செய்யலாம். ராணுவத்துறையிலும் முதலீடு செய்ய பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. கொரோனா தொற்று காலத்திலும், ஏப்ரல் – மே மாதத்தில், இந்தியாவில் அன்னியமுதலீடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சி என்றால், அது வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள வாய்ப்புகளுக்கான வளர்ச்சியாக இருக்கும்.

சர்வதேச அளவில், முதலீடு செய்வதற்கு நம்பிக்கையுள்ள நாடாக, இந்தியா திகழ்கிறது. இங்கே முதலீடுசெய்ய, இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய வர்த்தக கவுன்சிலின், 45ம் ஆண்டு நிறைவையொட்டி, நடந்த அமெரிக்க – – இந்திய வர்த்தக கவுன்சில் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...