நாளை அயோத்தியில் ராமர்கோயில் பூமிபூஜை விழா துவங்க உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதுகுறித்து பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியது,
ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம்காட்டிய பா.ஜ., மூத்த தலைவரான எல்.கே. அத்வானி நாளை நடக்க உள்ள பூமிபூஜையில் பங்கேற்றவில்லை. வீடியோ கான்பரன்சிங் மூலம் பார்வையிடுகிறார்.
இதுகுறித்து இன்று வீடியோ வாயிலாக அத்வானி கூறியது, ‘ராமர் கோவில் கட்டவேண்டும் என்பது எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு, அந்தகனவு நிறைவேறியுள்ளது:
இது எனக்குமட்டுல்ல, நாட்டு மக்களுக்கு மகத்தான, வரலாற்று சிறப்பு மிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் கட்டுவதற்கான பலதியாகங்களை மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |