சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு மேலும் தீவிரப்படுத்தும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் நடந்த உலக சம்ஸ்கிருத மாநாட்டில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியது: சம்ஸ்கிருத மொழி எந்த ஒரு இனத்துக்கோ
மதத்துக்கோ மட்டும் சொந்தமானது கிடையாது. குறுகிய மனப்பான்மையை ஒழிக்கக்கூடிய, விடுதலை உணர்வை வளர்க்கும் வகையிலான பண்பாட்டைப் பறைசாற்றும் மொழி .
சம்ஸ்கிருதத்தை நமது தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் அதனுள் பொதிந்திருக்கிறது. இன்றைக்கும் வாழ்ந்திருக்கும் மொழிகளுள் மிகப் பழமையானது சம்ஸ்கிருதம். இதை மதச் சடங்குகளுக்காகவும் வழிபாடுகளுக்காகவும் மட்டும் பயன்படும் மொழி என்று கருதிவிடலாகாது. அப்படிப்பட்ட தவறான புரிதல், கெüடில்யர், சரகர், சுஸ்ருதர், ஆரியப்பட்டர், வராகமிஹிரர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர் போன்றோரின் சீரிய சிந்தனைக்கும் படைப்புகளுக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.
கணிதம், மருத்துவம், தாவரவியல், வேதியியல், கலை, மொழியியல் என அனைத்து வகையான அறிவுப் பொக்கிஷங்களையும் சம்ஸ்கிருதம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. பல்வேறு ஆச்சாரியர்களும், அறிஞர்களும் தங்களது கருத்துகளையும் தத்துவங்களையும் புனிதமான வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பதிவு செய்திருக்கின்றனர்.
இன்றைக்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கும், “உலகமே ஒரு குடும்பம்’ என்கிற கருத்தை விதைத்ததும் அவர்கள்தான். இந்த மொழியை வளப்படுத்தவும், பிரபலப்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ளும் என்றார் பிரதமர்.
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.