பேஸ்புக் அவதுாறுகளுக்கு அந்நிறுவன மூத்த அதிகாரிகளே துணை

”பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் மீது, ‘பேஸ்புக்’கில் வெளியாகும் அவதுாறுகளுக்கு, அந்நிறுவன மூத்தஅதிகாரிகள் துணை போகின்றனர்,” என, மத்திய தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர், ரவி சங்கர்பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அவர், பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி, மார்க் ஜூகர்பர்கிற்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன்விபரம்: பிரதமர் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் மீது, பேஸ்புக்கில் தொடர்ந்து அவதுாறு பரப்பப்படுகிறது. இதற்கு, இந்தியாவில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் முக்கிய அதிகாரிகளே துணைபோகின்றனர். பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த அதிகாரிகளின் இந்தசெயல்களுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன், பேஸ்புக் பக்கங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான புகார்களுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், உண்மைக்கு மாறான, குறிப்பிட்டசெய்திகள் மட்டும் வெளியில் கசிய விடப் படுகின்றன.

இந்திய அரசியல் நடவடிக்கைகள் குறித்து புரளிகிளப்புவது கண்டனத்திற்குரியது. சமூக ஒழுக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் விஷமிகள், வன்முறைக்கென ஆட்களை நியமித்து, பேஸ்புக்வாயிலாக, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுகின்றனர்.

இந்திய அரசியலை ஸ்திரமற்றதாக ஆக்கவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.எனவே, இத்தகைய குறைபாடுகளை நீக்கி, இந்தியாவில் சமூகம் மற்றும் பல்வேறு மதங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், நாடுசார்ந்த சமூக விதிமுறைகளை, பேஸ்புக் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...