‘கொரோனா அனைவரையும் முடக்கிபோட்டாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதியசிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாபாதிப்பால் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு வலிநிறைந்ததாக இருக்கிறது. கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது.
இந்த நிலை, உலகமக்களின் மனநிலையில், ஒரு புதிய மாற்றத்துக்கான தேவையை உருவாக்கியுள்ளது. மனிததன்மை என்பதற்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டியது, தற்போதைய அவசியமாக உள்ளது. இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், துரிதமாக செயல்படுத்தப் பட்டன. இதன் பாதிப்பு கடுமையாக இருப்பினும், 130 கோடி மக்களின் லட்சியத்திலும், குறிக்கோளிலும், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இக்கட்டான சூழல்கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது அவசியம் என்பதை வலியுறுத்தி சொன்ன நாடுகளில், இந்தியா முதன்மையானதாக திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, வர்த்தகர்களுக்கு பலசீர்திருத்தங்கள் அறிவிக்கபட்டுள்ளன. அதிகார தலையீடுகள் இன்றி வர்த்தகம் எளிதாக நடைபெற, வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா அனைவரையும் முடக்கி போட்டாலும், புதிய சிந்தனைகளை விதைத்துள்ளது. இது வரை இல்லாத நம்மை சூழ்ந்திருக்கும் தற்போதைய சூழ்நிலை, புதியசிந்தனை, புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது. மனிதவள ஆற்றலை நம் மேம்பாட்டுக்காக எவ்வாறு பயன் படுத்துவது என்ற புதிய சிந்தனையை விதைத்துள்ளது.
மேலும், 2020ம் ஆண்டின் முடிவு இப்படி இருக்கும் என ஆண்டின் துவக்கத்தில் நாம் நினைத்தோமா? இப்படியான இக்கட்டான சூழல் ஏற்படும் என நினைத்திருக்க மாட்டோம். உலகையே உலுக்கி இருக்கும் கொரோனாபரவல், தனிமனிதன் ஒவ்வொருவரையும் கடுமையாக பாதித்திருக்கிறது. கொரோனா காலம், மனிதவள ஆற்றலை எப்படி பயன் படுத்தலாம் என்பதை நமக்கு கற்பித்திருக்கிறது.
இந்தியாவில் மருத்துவ வசதிகளை விரைவாக உருவாக்கியதால், கொரோனா இறப்புவிகிதம் குறைவாக உள்ளது.கொரோனாவில் இருந்து மீண்டுவருவோரின் விகிதமும் உயர்ந்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய வீட்டுவசதி திட்டம், டிஜிட்டல் மருத்துவ வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்போது எடுக்கப்படும் நடவடிக்கை, இந்தியாவை நாளை வளம்மிக்கதாக மாற்றுவதுடன், தற்சார்பு இந்தியா உருவாக அடித்தளமிடும். வெளிநாடுகள் இந்தியாவில் முதலீடுசெய்ய அழைப்பு விடுக்கிறேன்.
இந்தியா – – அமெரிக்கா உச்சிமாநாடு, கடந்தமாதம், 31 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. புதியசவால்களை எதிர்கொள்ளும் இந்தியா — அமெரிக்கா என்பதை மையமாக கொண்ட இந்தமாநாட்டில், இந்திய — பசிபிக் பிராந்திய சிக்கல்கள், அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியா ஈர்த்தல் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதன் மூன்றாவது நாள் உச்சிமாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக உரையாற்றியது .
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |