ராமநாதபுரத்தில் இளைஞர் அருண்பிரகாஷ் கொலை செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரணை செய்யவேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
ராமநாதபுரம் தாயுமான சுவாமி கோயில் தெருவைச்சேர்ந்த அருண் பிரகாஷ்(24) என்ற இளைஞர் கடந்த ஆக.31-ல் 12 பேர் கொண்ட கும்பலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று ஆறுதல் கூறினார்.
பின்னர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டம் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. கரோனாகாலத்தில் இந்தோனேசியா நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததற்கு, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி எதிர்ப்பு தெரிவித்து, அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தினார்.
அப்போதே நவாஸ் கனியை போலீஸார் கைது செய்திருக்கவேண்டும். அவர் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டதால் எம்பியாக இருக்க அருகதை இல்லாதவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பட்டினத்தில் வெளி மாநிலங்களிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றனர். அவர்களை அப்போது எம்எல்ஏவாக இருந்த ஜவாஹிருல்லா தலையிட்டு விடுவிக்கவைத்தார்.
ராமநாதபுரத்தில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு காவல்துறை தனிப்பட்டகாரணம் எனக் கூறி முகநூலில் பதிவிட்டது. காவல்துறை யாரையும் கைதுசெய்யாமல், விசாரணை செய்யாமல் எப்படி இப்படிகூறியது. முகநூலில் பதிவிட்டவரை தற்காலிக பணி நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும்.
அருண் பிரகாஷ் தொடர்ந்து 3 ஆண்டுகள் விநாயகர் சதுர்த்திவிழாவை முன்நின்று நடத்தியுள்ளார். இக்கொலையில் குற்றவாளிகளைக் காப்பாற்ற காவல்துறை முகநூலில் பதிவுபோட்டதாக தெரிகிறது. என்னைப்போன்றவர்கள் கொலை குறித்து முகநூலில் பதிவிட்டதற்கு கொச்சைப்படுத்தும் வகையில் காவல் துறை செயல்பட்டுள்ளது.
அருண் குமார் கொலை செய்யப்பட்டதற்கு உண்மையான காரணத்தை காவல் துறை சொல்ல வேண்டும். இக்கொலை வழக்கை தேசியபுலனாய்வு அமைப்பு(என்ஐஏ) விசாரணை செய்யவேண்டும். வழக்கை திசை திருப்பி உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட காவல்துறையினர் சதிசெய்கின்றனர்.
இதே மாவட்டம் புதுமடத்தில் தேசியக் கொடியில் செருப்பை கட்டி ஏற்றியவர்களை காவல்துறை இதுவரை கைதுசெய்யவில்லை. இதுபோன்ற பல இந்து தலைவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு தமிழகரசு நடவடிக்கை எடுக்கவில்லை.எனத் தெரிவித்தார்.
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |