சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணிதொடரும் என பாஜக மாநில தலைவர் முருகன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் புதியவேளாண் சட்டத்தால் வரிகள் குறையும், நேரடிவர்த்தகம் ஊக்குவிக்கப்படும், வெளிநாடு, உள்நாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும், விளைபொருட்களை கள்ளச் சந்தையில் பதுக்க முடியாது, விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும், மாநிலம்விட்டு மாநிலம் சென்று விவசாயிகள் நேரடியாக விளை பொருட்களை விற்பனை செய்யலாம்.

புதிய சட்டம் விவசாயிகளின் சுமைகளைக் குறைக்கும் வகையிலும், விளைபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையிலும்அமைந்துள்ளது. இந்த மசோதாக்களை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

புதிய மசோதாவால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் கிசான்நிதியுதவித் திட்டத்தில் நடந்த மோசடி மீதான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

அதிமுக-பாஜக இடையே மனக் கசப்பு இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் கூட்டணிதொடரும். சசிகலா சிறையில் இருந்து விடுதலையானபின் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையை பொருத்தே அவரது நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.