பாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசிய அளவில் புதிய நிர்வாகிகள நியமனம்

பாஜகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேசியஅளவில் புதிய நிர்வாகிகள நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா இது தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பா.ஜனதா கட்சியின் 12 துணைத் தலைவர்கள், 23 செய்தி தொடர்பாளர்கள் உட்பட 70 தேசிய அளவிலான நிர்வாகிகள் பட்டியலை ஜேபி நட்டா இன்று வெளியிட்டார்.

பாஜக புதிய துணைத் தலைவர்கள்: ராமன்சிங் (சத்தீஸ்கர்), வசுந்தரராஜே சிந்தியா (ராஜஸ்தான்), ராதாமோகன்சிங் (பீகார்), பைஜந்த் ஜெய்பாண்டா (ஒடிசா), ரகுபர் தாஸ் (ஜார்க்கண்ட்), முகுல் ராய் (மேற்கு வங்கம்), ரேகா வர்மா (உபி), அன்னபூர்னா தேவி (குஜராத்), டிகே அருணா (தெலுங்கானா), சசூபா ஆவோ (நாகாலாந்து), அப்துல்லா குட்டி(கேரளா).

தேசிய பொதுச் செயலாளர்கள்: பூபேந்திரன் யாதவ் (ராஜஸ்தான்), அருண் சிங் (உபி), கைலாஷ் விஜவர்ஜியா (மபி), துஷ்யந்த்குமார் கவுதம் (டெல்லி), புரந்தரேஸ்வரி (ஆந்திரா), சிடி ரவி (கர்நாடகா), தருண் சுக் (பஞ்சாப்), திலிப் சாகியா (அஸ்ஸாம்). தேசிய பொதுச்செயலாளர் (அமைப்பு)- பி.எல்.சந்தோஷ் (டெல்லி).

தேசிய இணைச் செயலாளர்கள்: வி. சதீஷ் (மும்பை), சுதன் சிங் (ராய்ப்பூர்), சிவ பிரகாஷ் (லக்னோ); தேசிய செயலாளர்கள்-வினோத்தாவதே (மகாராஷ்டிரா), வினோத் சோங்கர் (உபி), பிஸ்வேஸ்வர் துடு (ஒடிஷா), சத்யாகுமார்(ஆந்திரா), சுனில் தியோதர் (மகாராஷ்டிரா), அரவிந்த் மேனன் )டெல்லி), ஹரீஷ் திவேதி (உபி) பங்கஜா முண்டா (மகாராஷ்டிரா), ஓம் பிரகாஷ் துர்வே(மபி), அனுபம் ஹஜ்ரா (மேற்கு வங்கம்), நரேந்திர சிங் (ஜம்மு காஷ்மீர்), விஜயா ரத்கார் (மகாராஷ்டிரா), அல்கா குர்ஜா (ராஜஸ்தான்).

பாஜவின் தேசிய பொருளாளராக ராஜேஷ் அகர்வா (உபி) நியமிக்க பட்டுள்ளார். மேலும் 23 செய்தித் தொடர்பாளர்களும் அறிவிக்கப் பட்டுள்ளனர். பாஜகவின் தேசிய இளைஞரணி அமைப்பான யுவ மோர்ச்சாவுக்கு சர்ச்சைக்குரிய கர்நாடகா எம்பி தேஜஸ்வி சூர்யா நியமிக்கப் பட்டுள்ளார். அத்துடன் பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக அமித் மாளவியா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...