இராம.கோபாலன்ஜி வாழ்க்கை வரலாறு*

இந்து முன்னணி – நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் பள்ளிச் சிறுவனாய் இருந்த காலம்.அவரது வீட்டில் ஓர் ஓவியம் உண்டு. பகத்சிங் தன்தலையை வெட்டி எடுத்து பாரத மாதாவுக்கு காணிக்கை செலுத்துவதுபோன்ற உயிரோட்டத்துடன் அமைந்த ஓவியம் அது . ஒருநாள் இராம.கோபாலன்தன் தந்தையிடம்h அந்த ஓவியத்துக்கு அர்த்தம்கேட்கிறார் . தந்தை சொன்னார் : “நாட்டுக்காக வாழணும் . இந்த நாட்டுக்காக எந்த தியாகமும் பண்ணலாம் . தேவைப் பட்டால் உயிரையும் தரலாம் . இந்த படத்துக்கு அது தான்பா அர்த்தம்” என தந்தை கூறியவிளக்கம் சிறுவன் இராம.கோபாலனின் அடி மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அது புதைந்து விதைவிட்டு, வேர் விட்டு , கிளைவிட்டு விருட்சமானது.*

தந்தை ஒருதீவிர தேசியவாதி. அவர்கூறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் சிலிர்க்க வைக்கும். பாரதி ,திலகர் ,வாஞ்சிநாதன் , வஉசி . பற்றி தந்தை கூறும் போது , தானும் அதுபோல வாழவேண்டும் என்ற எண்ணம் இராம . கோபாலன் மனதில் எழுந்தது .*

*இராம கோபாலனின் தந்தை : மு . இராமஸ்வாமி ; தாய் செல்லம்மாள் .*
*பிறந்த நாள் :* *19-9-1927.*
*பிறந்த ஊர் : தஞ்சை மாவட்டம் சீர்காழி .சம்பந்தருக்கு ஞானப்பால் தந்ததிருத்தலம் .*

*தந்தை சிறுவிவசாயி . காவிரி நீர் பிரச்னை இல்லாத அந்த காலத்தில் முப்போக விளைச்சல்! பள்ளி சிறுவனாய் இராம.கோபாலன் துள்ளித்திரிந்த காலம்.*

*சுதந்திர நெருப்பு நாடெங்கும் பற்றியெரிந்தது . அந்தநெருப்பு இவரையும் விட்டு வைக்க வில்லை . சுதந்திரப் போராட்ட மேடைகளில் பாரதிபாடல்களை உணர்ச்சி ததும்ப கம்பீரமாகப் பாடுவார் .சீர்காழியிலுள்ள சட்டநாத ஸ்வாமி திருக்கோயிலுக்குள் அடிக்கடி சுதந்திர போராட்டக் கூட்டங்கள் நடக்கும் . பட்டுக்கோட்டையிலிருந்து நாடிமுத்துப் பிள்ளை என்ற சுதந்திரப் போராட்ட வீரர் பல முறை அங்குவந்து பேசியிருக்கிறார் . அது போன்ற கூட்டங்களில் கலந்துகொண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் பேச்சுகளைக் கேட்க …. கேட்க … சிறுவன் இராம.கோபாலனுக்குள் தேசப்பற்றும், தேசிய உணர்வும் படிப்படியாக கொழுந்துவிட்டு எரியத்தொடங்கின .*

*ஒருபுறம் தேச உணர்வு பொங்கியெழுந்தாலும் இராம.கோபாலன் படிப்பில் சோடை போகவில்லை . நன்றாகப் படித்தார் .ஆனாலும் , சிறுவர்களுக்கே உரிய வால் தனமும் உண்டு .*

*சீர்காழியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு , கல்லூரிப் படிப்புக்காக சென்னைவந்தார் . வீட்டில் இன்ஜினீயரிங் எடுத்துப் படிக்கச் சொன்னார்கள் . ஆனால் , அதற்கு ஏகப்பட்டபணம் தேவைப்பட்டது . இதனால் டிப்ளமோ முடித்து ஏ.எம்.ஐ.ஈ.ச. சேர்ந்து படித்து கொண்டிருந்தபோது 1945 – ல் ஆர்.எஸ்.எஸ் – ல் சேர்ந்தார்.*

*படித்து முடித்தபிறகு , மின்சாரத் துறையில் வேலைகிடைத்தது . குடியாத்தத்தில் பணி . இவர் அங்கு வேலை பார்த்ததைவிட , ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக பார்த்த வேலைதான் அதிகம் .*

*இந்த நிலையில்தான் , சுதந்திரம் கிடைத்து.தேசப்பிரிவினையின் போது , சிந்து பகுதியிலிருந்து இந்து மக்கள் புலம்பெயர்ந்து சென்னை வந்தார்கள் . அவர்கள் ஆவடியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் . ஆர்.எஸ்.எஸ் சார்பாக இராம.கோபாலன் தொண்டர்களுடன் ஆவடிக்குச்சென்று ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த மக்களுக்கு உதவி செய்வார் . அப்போது, அவர்களின் கண்ணீர்க் கதைகளைக் கேட்ட இராம.கோபாலன் துடித்துப் போனார். மனதை சோகம் அப்பிக்கொண்டது .இந்த நாட்டு மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டியுள்ளதே என்று கொதித்தார் .*

*இந்துக்கள் பலஹீனமாக இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம் என்ற தீர்மானம் அவர் மனசுக்குள், இந்துக்களை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் முழுநேரத் தொண்டராக (பிரச்சாரக்) முடிவெடுத்தார் இராம .கோபாலன்.*

*நாடு முக்கியம் . நாடு என்பது வெறும் நிலமல்ல; அதில் வாழும் மக்கள் ! அந்த மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் . அதை ஆர்.எஸ்.எஸ் . ஆல் மட்டுமே நிகழ்த்திக் காட்டமுடியுமென்று முடிவெடுத்தவர் , தனது வேலையை உதறினார் . முழுநேர ஆர்.எஸ்.எஸ் . (பிரச்சாரக்) தொண்டரானார் .*

*1948 – ல் ஆர்.எஸ்.எஸ் . இயக்கத்துக்குத் தடைவிதித்தது அரசு . திருநெல்வேலி யில் முழுநேர ஊழியராய் இருந்த இராம.கோபாலன் கைதுசெய்யப்பட்டு , வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.*

*சிறைவாழ்க்கை இராம . கோபாலனின் உணர்ச்சிகளில் திடத்தையும் அறிவில் தெளிவையும் அளித்தது . யோகா , பிராணாயாமம் , தியானம் , உடற்பயிற்சி என்று இராம.கோபாலனின் சிறைப் பொழுதுகள்நகர்ந்தன. மீதி நேரங்களில் புத்தக படிப்பு.*

*சிறையில் படித்த வீரசாவர்க்கர் எழுதிய எரிமலை என்றநூல் இவரது மனசுக்குள் தீக்கங்குகளை வீசியது . சுதந்திரப் போராட்ட வீரர்களைப்பற்றி எழுதப்பட்ட அந்த நூல் இவரது இரவுகளில் நெருப்பாய் எரிந்தது.*

*சுமார் ஆறு மாதங்கள் நீடித்தது இந்தச் சிறைவாழ்வு , பிறகு , ஹேபியஸ் கார்பஸ் கொண்டு வரப்பட்டு பலர் விடுதலையாகினர் . ஆர்எஸ்எஸ் . க்குத் தொடர்ந்து தடை நீடித்தாலும் ரகசியமாக இயங்கினார் இராம. கோபாலன் .*

*சென்னையில் மின்சாரத் துறையில் மீண்டும் வேலையில் சேர்ந்தார் . ஆறுமாதம் வேலையிலிருந்தார் .இயக்க பணிகளுக்கு சம்பளப்பணி இடையூறாக இருந்ததால் மீண்டும் வேலையை உதறினார் .தொடர்ந்து தீவிர ஆர்.எஸ்.எஸ் பணி . அதன் பிறகு , குடும்பம் ,சொந்தங்களை மறந்தார் . வீட்டுக்குக் கூடச் செல்வதில்லை . எண்ணம் , செயல் அனைத்தும் இயக்கமாக மாறிப்போனது . அதன் பிறகு போராட்டங்கள் .. கைது … சிறை வாழ்க்கை என்று இந்தப் பிரம்மச்சாரியின் வாழ்வு கரடுமுரடான பாதையில் , பயணப்பட்டது .*

*நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் . போராடிய போது , இவரைக் கைதுசெய்ய போலீஸ் வலைவீசி தேடியது . இவரோ , மாறுவேடம் தரித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து , ஆர்.எஸ்.எஸ்.ஸின் தகவல் தொடர்பாளராக தமிழகம் முழுக்கச் சுற்றி வந்தார் .*

*94 வயதாகும் இவர் திருமணம் குறித்து ஒருமுறை கூட யோசித்ததேயில்லை. இது குறித்து இந்து முன்னணித் தொண்டர் ஒருவர் கூறும்போது , ” திருமணம் செய்து கொண்டால் , இயக்கப் பணிகளில் தீவிரமாக ஈடுபடமுடியாது . குடும்ப வாழ்க்கை இயக்கப் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் திருமணத்தையே மறந்து விட்டார். இந்திய நாட்டைக் குடும்பமாகவும் மக்களைத் தன் குடும்பத்தவர்களாகவும் நேசிக்க ஆரம்பித்து விட்டார் ” என்கிறார் .*

*இராம கோபாலன் கவிஞரும்கூட இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் ஆர்.எஸ் .எஸ் . இயக்கத்தின் மேடைகளில் தேச பக்திப் பாடல்களாகப் பாடப் படுகின்றன .*

*இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ் . தீவிரமாகப் பணியாற்றினாலும் , தமிழக அளவில் சில விஷயங்கள் தனிக்கவனத்துடன் கவனிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்தார் இராம.கோபாலன் குறிப்பாக தென் மாவட்டங்களில் பரவலாக நடந்த மதமாற்றங்கள் !*

*இதற்காக , ஆர்.எஸ்.எஸ்.ஸின் தென்பாரத அமைப்பாளர் யாதவ ராவ் ஜோஷியின் வழிகாட்டுதலால் 1980 ம் ஆண்டு இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம்தான் இந்து முன்னணி ..*

*இதன் முதல் தலைவர் ப.தாணுலிங்க நாடார் . இந்துமுன்னணி வளர்ச்சிக்காக இராம. கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார் .*

*1982 – ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும், தலையிலும் பலத்தவெட்டு தழும்பை மறைக்க அன்றி லிருந்து காவித் தொப்பியணிய ஆரம்பித்தார். என்றாலும் இராம கோபாலனின் பணிதுளியும் அச்ச மின்றி இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.*

*அவரிடம் உங்களுக்கு வயது என்ன என்று கேட்டால் அவர் சொல்லுவது ஜஸ்ட் 94.*

*இந்து முன்னணியினர் இராம.கோபாலனை “வீரத் துறவி” என்றுதான் பாசத்தோடு அழைப்பார்கள்*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...