தூய்மை இந்தியா திட்டத்தின் 6ம் ஆண்டை கொண்டாடும் மத்திய வீட்டு வசதி துறை

மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு , தூய்மை இந்தியா திட்டத்தின் 6வது ஆண்டுவிழாவை, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கொண்டாடுகிறது.

இதை முன்னிட்டு ‘6 ஆண்டுகள் தூய்மை, ஒப்பிட முடியாதது’ என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தலைமை தாங்குகிறார்.

தூய்மை இந்தியாதிட்டத்தை தீவிரமாக அமல்படுத்தும் புதுமையான நடைமுறைகளை வெளிப்படுத்து வதற்காக இணையதளத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கிவைக்கிறார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாநிலங்கள்/நகரங்கள் தங்கள் அனுபவம்/ அடுத்தகட்ட நடவடிக்கைகளை கூறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுவரை 4,327 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திறந்தவெளிகழிப்பிடம் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

66 லட்சம் வீடுகளில் கழிவறைகள் மற்றும் 6 லட்சத்துக்கும்மேற்பட்ட சமுதாய கழிவறைகள் நிறைவடைந்துள்ளன. இது வரை 1,319 நகரங்களுக்கு திறந்தவெளி கழிப்பிடம் இல்லா + சான்றிதழ் மற்றும் 489 நகரங்களுக்கு திறந்தவெளி கழிப்பிடம்இல்லா ++ சான்ழிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன.

2,900க்கும் மேற்பட்ட நகரங்களில் கட்டப்பட்ட 59,900 கழிவறைகள் கூகுள்வரைபடத்தில் இடம் பெற்றுள்ளன. 97% வார்டுகளில் வீட்டுக்குசென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தூய்மை கணக்கெடுப்பு பணியில் 12 கோடிப்பேர் பங்கேற்றுள்ளனர். துப்பரவு பணியாளர்கள் அனைவருக்கும், கண்ணியமான வாழ்வாதாரம் அளிக்கப் பட்டுள்ளது.

முறைசாரா குப்பைசேகரிப்போர் 84,000 பேர் பிரதான வாழ்க்கையுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளனர். துப்புரவு பணியாளர்கள் 5.5 லட்சம்பேர் பல்வேறு நலத்திட்டங்களில் இணைக்க பட்டுள்ளனர்.

திறன் மேம்பாடுக்காக 150க்கும் மேற்பட்ட பயிலரங்குகள் நடத்தப்பட்டன. இவற்றில், 3,200க்கும் மேற்பட்ட நகர்ப்புறஉள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...