அடுத்தடுத்து பிரபலங்கள் அதிர்ச்சியில் திராவிட கட்சிகள்

தமிழக பா.ஜ.,வில், அடுத்தடுத்து பிரபலங்கள் மற்றும் மாற்றுகட்சியினர் இணைந்து வருவது, திராவிட கட்சிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஆறுமாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை, தமிழக பா.ஜ., அசுரவேகத்தில் செய்துவருகிறது. தற்போது, அதிமுக., கூட்டணியில் இருந்தாலும், தனி ஆவர்த்தனம் செய்ய துவங்கிவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும், மாற்று கட்சியினர், பா.ஜ.,வில் இணைவது, தொடர்கதையாகி வருகிறது.அதேபோல, பிரபலங்களும், பா.ஜ.,வை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நேற்று நடிகை குஷ்பு, முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி சரவணகுமார், பத்திரிகையாளர் மதன் ரவிச்சந்திரன் ஆகியோர், டில்லி சென்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.

அரசுபணியை துறந்து, பா.ஜ.,வில் இணைந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணா மலையை பின்பற்றி, ஐஆர்எஸ்., அதிகாரி சரவண குமாரும், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இந்திய வருவாய்பணி அதிகாரியாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர். கடந்த, 2017ல் விருப்ப ஓய்வு பெற்றார்; சட்டம் படித்துள்ளார்.வருமான வரித்துறை, நிதி விவகாரங்கள் தொடர்புடைய வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். மேலும், பலகார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, சட்ட ஆலோசகராகவும் உள்ளார்.

இதுபோல, படித்த நபர்கள், பிரபலங்கள் எல்லாம், பா.ஜ.,வை நோக்கிவருவது, கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது. அதேநேரத்தில், திராவிட கட்சிகளிடம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...