திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப் பேரவை தேர்தலைபோன்று வரும் தேர்தலிலும் ஜீரோவாகத் தான் இருக்கும் என்று பாஜக மாநிலதலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு சிலமாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. அந்தவகையில் திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்புகுழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின்பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக பொருளாளர் டிஆர்.பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சிசிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்ட 8 பேரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் ஜனவரிமாதம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல்வார இறுதி தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்ககும் என தெரிகிறது.
இந்நிலையில், சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலதலைவர் எல். முருகன், திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப் பேரவை தேர்தலை போன்று வரும்தேர்தலிலும் ஜீரோவாகத் தான் இருக்கும்.
வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். சமூகத்தில் ஒற்றுமைநிலவ அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
திமுக தலைவர், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிக்கைமட்டுமே விடுகின்றனர். ஊராட்சியில் தலித்விவகாரத்தில் திமுக தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |