பள்ளிகளில் புதியகல்வி முறையை அமல்செய்ய மத்திய அமைச்சரவை பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று முடிவு செய்தது.
புதிய கல்விக்கொள்கை முறை- மனப்பாடம் செய்யும் நடைமுறையில் இருந்து மாறுபட்டதாக மாணவர்கள் புரிந்து படிக்கும் முறையாக அமையும் என்று அமைச்சரவை முடிவு பற்றி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இந்தப்புதிய கல்வி பயிற்றுவிக்கும் முறையை மத்திய கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற கல்வி தொடர்பான திட்டங்களை உள்ளடக்கியதாக மாநில அரசுகளின் உதவியுடன் அமல்செய்ய திட்டமிட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜாவடேகர் தெரிவித்தார்.
மொத்தம் 11 மாநிலங்களில் இந்ததிட்டம் அமல் செய்யப்படும்.
மத்திய அரசின் திட்டமாக பள்ளிக்கல்வித்துறை. மற்றும் கல்வி அமைச்சகம் ஆகியவற்றினால் இந்த திட்டம் அமல் செய்யப்படும் எழுத்தறிவு கல்வியறிவு தொடர்பான மற்ற திட்டங்களும் இவற்றின் கீழ் இணைக்கப்படும்.
புதிய பயிற்றுவிக்கும் திட்டத்துக்கு ஸ்டார்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
(Strengthening teaching learning and results for States).
11 மாநிலங்களில் 6 மாநிலங்களுக்கு உலக வங்கியின் நிதிஉதவி ரூ.3700 கோடி பயன்படுத்தப்படும்.
அந்த ஆறு மாநிலங்களில் பெயர்கள் வருமாறு: 1ஹிமாச்சலப் பிரதேசம் 2.ராஜஸ்தான் 3.மகாராஷ்டிரம் 4.மத்தியப் பிரதேசம் 5.கேரளம் 6.ஒடிசா
ஐந்து மாநிலங்களில் ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூபாய் 5 800 கோடி நிதி உதவியுடன் புதிய கல்வி திட்டம் அமல் செய்யப்படும்.
இந்த இரண்டாவது குழுவில் உள்ள மாநிலங்களின் பெயர்கள்:1. குஜராத் 2.தமிழ்நாடு 3.உத்தரகாண்ட் 4.ஜார்கண்ட் 5.அசாம்.
3 முதல் 8 வயது வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு புதியதிட்டம் அறிமுகம் செய்யப்படும் .இதற்கென ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் திறன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பீட்டுமுறை அமலுக்குவரும் அத்துடன் வாசிப்பு எண்கள் பற்றிய அறிவு ஆகியவையும் புதியகல்விக்கு அடிப்படையாக அமையும்.
கல்வியின்பயன் என்ற அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மூன்றாம் வகுப்புவரை மாணவர்களுக்கு மொழிமட்டுமே கற்றுத் தரப்படும்.தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் இடம்பெறும்.
கல்வி அமைச்சகத்தின் கீழ் பள்ளிக் கல்வித் துறையினால் தேசியமதிப்பீட்டு மையம் உருவாக்கப்படும்.
இந்ததிட்டம் மத்திய திட்டமாக அமல் செய்யப்படும் மாநிலங்களுக்கிடையே ஒத்துழைப்பு அனுபவபரிமாற்றம் மாணவர் கல்விதேர்வு திறன் ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்களை பரிமாறி கொள்ளுதல் ஆகியவை இடம்பெறும்.
தொழில் தொடர்பான அடிப்படை கல்விமுறையும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக அமையும்.தேசியளவில் மதிப்பீட்டு முறை ஒன்றை உருவாக்க இந்த திட்டத்தின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சர்வதேசத் தரத்துடன் போட்டியிடுவதாக இந்தியாவின் கல்விதரம் மேம்படுத்தப்படும். புதிய கல்வி திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம் புதியகல்விக் கொள்கை .ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்கள் .ஆத்மா நிர்பார் பாரத் ஆகியவற்ரின் நோக்கங்களை ஒருங்கிணைத்து அமல்செய்வதாக அமையும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜாவடேகர் தெரிவித்தார்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |