புதுச்சேரியில் தாமரைமலரும்

வரும் சட்டப் பேரவை தேர்தலில் புதுச்சேரியில் தாமரைமலரும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில நிர்வாகிகள் குழுகூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பாஜக அலுவலகத்துக்கு இன்று (அக். 16) வந்திருந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“பாஜகவில் இணைய விரும்பி பலதலைவர்கள், இதர கட்சி எம்எல்ஏக்கள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். எங்களின் அடிப்படை இலக்கு கட்சியைப் பலப்படுத்துவதுதான். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு முழுதோல்வியைடைந்துள்ளது. கரோனா காலத்தில் இது வெளிப்படையாகியுள்ளது. அதனால் தான் புதுச்சேரியை தமிழகத்துடன் மத்திய அரசு இணைக்க உள்ளதாக தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுக்கு அதுபோல்திட்டம் ஏதுமில்லை. தங்கள் தோல்வியை மறைக்கவே பாஜக மீது பொய் குற்றச்சாட்டை முதல்வர் நாராயணசாமி சுமத்துகிறார். அதை எப்படி எழுப்புகிறார் என்று தெரியவில்லை. மத்தியஅரசுக்கு அதுபோல் திட்டமில்லை. பொய்யான குற்றச்சாட்டு.

பாஜக தலைமை அலுவலகமாக ராஜ்நிவாஸ் செயல் படுவதாகக் கூறும் முதல்வரின் குற்றச்சாட்டு தவறானது. மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டும் எனச் சாலையில் நாங்கள் போராடுகிறோம். நாங்கள் ஆளுநர் அலுவலகத்தை பயன்படுத்துவதில்லை. அதேபோல், புதுச்சேரியில் ஆளுநர் மாற்றம் உள்ளதா என்ற கேள்வியும் கட்சி அரசியலுக்குத் தொடர்பில்லாதது.

மோடியின் தலைமையை ஏற்போருடன் இணைந்து வரும் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திப்போம். நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தேர்தல்தொடர்பான பிரச்சார வழிமுறைகளை வடிவமைப்போம்”.

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்தார்.

பேட்டியின் போது பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

One response to “புதுச்சேரியில் தாமரைமலரும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...