இவரை சமூகம்தான் தண்டிக்க வேண்டும்!

” என்னுடைய தாயும் சகோதரியும் விபச்சாரிகள்தான், ஏன் கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து பெண்களும் விபச்சாரிகள்தான்” – என பொருள்படும் வகையில் பேசியுள்ளார்’ சிதம்பரம் நடராஜர் கோயிலில் வழிபாடு நடத்திவரும் “தமிழ் இந்து” திருமாவளவன்!.

“ பிராமண பெண்கள் முதல் அனைத்து தரப்பு பெண்கள் வரை ” என்று ஜாதிபாகுபாட்டையும் குறிப்பிட்டு எல்லா பெண்களும் விபச்சாரிகள்தான் என்று சொல்லியுள்ளார் அவர்! கடவுளால் படைக்கப்பட்ட எல்லோரும் என்று சொல்லும்போது அது உலக பெண்கள் அனைவரையுமே குறிக்கிறது!
மாற்றுமத பெண்களையும் குறிக்கிறது!

தன்னிடம் உள்ள காம வெறியை இப்படி வெளிப்படுத்தியுள்ளார் திருமாவளவன்!
சனாதனதர்மம் அப்படி சொல்கிறது மனுதர்மம் அப்படி சொல்கிறது இந்து மதம் அப்படி சொல்கிறது! என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறார்!. சனாதன தர்மம் என்பது இந்துதர்மத்தின் இன்னொரு பெயர்தான்!. ”#மனு” என்னும் சொல்லுக்கு ”மனிதன்” என்பது பொருள்! மனுதர்மம் என்பதன் பொருள் மனிதனின் தர்மம் என்பதாகும்!

மனிதனின் தர்மம் ”இதுதான்” ”அதுதான்” என்று ஆயிரத்திற்கும் மேல்பட்டவர்கள் ”மனுதர்மம்” என ஆதிகாலம் தொட்டு புத்தகங்கள் எழுதியுள்ளனர்!
மனிதர்களுக்காக எழுதப்பட்டது எல்லாமே மனுதர்மம்தான்!

#கருனாநிதி, #அண்ணாத்துரை, #ஈவேரா போன்றோர் கூட மனுதர்ம்மம் எழுதியுள்ளார்கள்!
இவர்கள் மூவருமே இந்துக்கள்தான்!
அதற்காக இவர்கள் எழுதியதெல்லாம் இந்துதர்மம் ஆகிவிடுமா என்ன?
மனுநீதி என்று யாரோ ஒருவர் முன்பொரு காலத்தில் எழுதியதாக இவர்கள் சொல்கிறார்கள்!

ஆனால் அப்படி ஒரு புத்தகம் எந்த இந்துவிடமும் இல்லை!
எந்த கோயிலிலும் அத்தகைய எழுத்தாளருக்கு சிலைகள் இல்லை!
”மனிதனின் நீதி இதுதான்” ”மனுநீதி இதுதான்” என்று பலரும் சட்ட திட்டங்களை வகுத்ததாகவும் அறிவுரைகளை எழுதி வைத்ததாகவும் நாம் வரலாற்றில் படித்திருக்கிறோம்!

ஆனால் இந்த வக்கிரபுத்தியுள்ளவரின் கண்ணில் பட்டதுபோல் ஒரு விசயத்தை யாரும் எந்த நீதி புத்தகத்திலும் படித்ததில்லை!
இவரின் குருமார்களான திகவின் கருனாநிதியும் அண்ணாத்துரையும் ஈவேராவும் ஏதோ ஒரு மனு நீதியில் ஜாதியைப்பற்றி சொல்லியிருக்கிறது என்றுதான் சொன்னார்கள், இவரைப்போல இம்மாதிரி அசிங்கமாக அவர்களும் சொல்லவில்லை!

ஜாதியைப்பற்றி சொன்னவர்கள்தான் ஜாதிபேதத்தை தூண்டி வாக்கு வேட்டை நடத்தினார்கள் என்பது தனி விசயம்! ஜாதிகள் இனத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பதற்காக இருக்கலாம்! ஆனால் ஜாதிகளுக்குள்ளே உயர்வு தாழ்வு கூடாது என்பதுதான் இந்து தர்மம்! நாம் விதுரர் நீதியை படிக்கிறோம்! பீஸ்மர் நீதியை படிக்கிறோம், கண்ணனின் நீதியை(கீதையை) படிக்கிறோம், ராமரின் நீதியை படிக்கிறோம் இன்னும் ஏராளமான நீதிகளை படிக்கிறோம்! கேட்கிறோம்!
நான்கு வேதங்களும் உபநிடதங்களும், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நாலடியார், திருக்குறள் என அனைத்துமே இந்துக்களின் நீதி நூல்கள்தான்!
மேலே சொன்ன இம்மாதிரியான புத்தகங்களில் சொல்லப்பட்டதெல்லாம் இந்துமதம் சொன்னதுதான்!

இம்மாதிரி வக்கிர புத்திக்காரனின் மனதில் தோன்றுவதெல்லாம் இந்துமதத்தின் கருத்து என்று எப்படி சொல்ல முடியும்! பாரதியார் தமிழ் இந்து! ஈவேரா கன்னட இந்து! இருவருமே இந்துக்கள்தான்! நாம் பாரதியின் வரிகளை கண்ணன் பாட்டுகளை, காளி பாட்டை, பெண் விடுதலையை, பாஞ்சாலி சபதத்தை இந்து தர்மத்தின் குரலாக ஏற்றுக்கொள்கிறோம்!

அதே நேரம் ஈவேரா ”பெண்ணுக்கு கற்பு தேவையில்லை” என சொன்னதை இந்து மதத்தின் கருத்தாக ஏற்றுக்கொள்கிறோமா என்ன? மாட்டோம்!
ஆனால் பெரியார் இந்துதான்! இந்து சொன்னதெல்லாம் இந்துமத கருத்தாகாது!
இந்துக்களால் ஏற்கப்பட்டு, நடைமுறைபொபடுத்தப்பட்டால் மட்டுமே அது இந்து மத கருத்தாகும்!

இந்து தர்மப்படி பெண் என்பவள் பராசக்தியின் வடிவம்! அவள் தெய்வம்! சிவனோடு சக்திபோல, மகாவிஷ்ணுவோடு மகாலட்சுமிபோல, பிரம்ம தேவனோடு சரஸ்வதிபோல ஒவ்வொரு மனிதனோடும் சக்தியாக வாழ்பவள் பெண்!
இந்து இல்லத்தில் பிறக்கும் பெண் குழந்தை மகாலட்சுமிதான்!
குழந்தையாக இருந்தாலும் கன்னியாக இருந்தாலும் அவளை ”தாயே” ”அம்மா” என்று அழைப்பதுதான் இந்து மரபு!

சில இடங்களில் தவறு நடக்கிறது என்றால், அதற்கு திருமாவளவன் போன்ற வக்கிர புத்திக்காரர்கள் காரணம்! புத்தகக்கடையில் போய் நின்றால், நல்லவனின் கண்ணில் ஆன்மீக புத்தகமும் அறிவியல் புத்தகமும் படும், காமுகன் கண்ணில் காம புத்தகங்கள் படும், காமுகனை விட மோசமான மனம் படைத்த இவர்களைப்போன்ற வக்கிர புத்தி உள்ளவர்கள் கண்கள் “ஓடிப்போனவள்” ”மாற்றான் மனைவி” “விபச்சாரி” இம்மாதிரி ஏதாவது இருக்கிறதா என்றுதான் தேடும்!

எதுவுமே அப்படி கிடைக்கவில்லை என்றால், தனது வார்த்தைகளிலாவது அதை சொல்லி இன்பம் கான்பான்! அத்தகைய ஒரு வேலையைத்தான் திருமாவளவன் கேமரா முன்பு செய்திருக்கிறார்!

இது அவரது மனக்கூற்றின் விளைவு! இது கடுமையாக கண்டிக்கத்தக்கது!
அவருடைய தாய் மற்றும் சகோதரி உள்ளிட்ட அனைத்து பெண்களையும், அவரின் வீட்டின் உள்ளே அவர் எப்படி வேண்டுமானாலும் கருதிக்கொள்ளட்டும்!
ஆனால் பொது இடத்தில் இப்படி வாயாடினால், சமுதாயத்தின் தன்ணணைக்கு ஆளாக நேரிடும்!

இந்துமதம் பெண்களையும் பெண்மையையும் தாயாக வணங்குகிறது!
ராமகிருஷ்ண பரமகம்சர் தனது மனைவியான சாரதா தேவிக்கு ஆரத்தி எடுத்து வணங்கிய காட்சிதான் இந்து மதத்தில் ”பெண்ணின் நிலைக்கான” ”முத்திரைக் காட்சி”! தனது மன வக்கிரத்தை வெளிப்படுத்திய திருமா அப்படியே ஒரு கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்திவிட்டார்!

ஒரு மாங்காய் வக்கிரபுத்திக்கு வடிகால் தேடியது, இன்னொரு மாங்காய் அதோடு இந்து மதத்தை இழிவு செய்தது! இந்துமதத்தை இழிவு செய்தால் சீனாவில் இருந்து பணம் கிடைக்கும்! அப்படியே இவரது டுவிட்டர் பக்கத்தை தள்ளிப்பாருங்கள் 2020 ஜூன் 15 ல் சீனா நம் வீரர்களை கொன்றதற்கு இவர் கண்டனம் தெரிவித்திருக்க மாட்டார்!.

இந்தியாவின் இந்து மதத்தை இழிவு செய்து அன்னிய மதமாற்றத்திற்கு உதவும் இந்தியர்களுக்கு முதன்முதலில் இங்கிலாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து பணம் வந்தது!  அதன் பின்பு அரபுநாடுகளில் இருந்தும் பணம் வந்தது!
இப்போது சீனாவிடமிருந்தும் பணம் வருகிறது!. இவருடைய சமூக ஊடக பக்கங்களை புரட்டிப்பாருங்கள் இவர் முஸ்லீமாகவும் வேடம் போடுவார்! கிருஷ்தவராகவும் வேசம் போடுவார்!.

ஆனால் சிதம்பரத்தில் போய் சாமி கும்பிடும் இந்துதான் இவர்!, இவரது செயல்பாட்டில் தேசத்துரோகமும் இருக்கிறது, பெண்கள் மீதான வன்கொடுமை வக்கிர விபச்சார உணர்வும் இருக்கிறது!, கடுமையான தண்டனையை சமுதாயம்தான் இவருக்கு தரவேண்டும்!

– குமரிகிருஷ்ணன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...