மனு தர்ம அரசியல்!

மிகப் பழைய யுக்தி இப்போது அவசியமான அரசியலாகிறது. ஜாதிகளை கடந்து ஹிந்துக்கள் ஒருங்கிணைப்பு பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி! தமிழகத்திலும் அது துளிர் விடத் துவங்கி இருக்கிறது.

அதை முளையிலேயே கிள்ளி எறிய ஜாதிய பிரிவினைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். ஹிந்து மதத்தின் உண்மையான பெயரே தசனான தர்மம் தான். ஆனால், அது ஒட்டு மொத்த ஹிந்துக்களின் அடையாளப் பெயரல்ல,பிராமணர்களின் தனி அடையாளம் என்றும், மனு தர்ம நூல் அவர்களுடையது அவர்களது சிந்தனைகள் இழிவான பாகுபாடுகளைக் கொண்டவை எனவும் நிறுவும் பழைய உத்தி தான் இது.

தமிழ் நாட்டில் ராமசாமி நாயக்கர் -கருணா நிதி தொடங்கி, உத்தரப் பிரதேசத்தில் முலயாம் சிங் யாதவ் – அகிலேஷ்,கன்சி ராம்- மாயாவதி என நீண்டு, பிஹாரில் லாலு பிரசாத் வரை பயன்பட்டு தோற்ற உத்தி.ஆனால்,இவர்கள் சொல்லும் சனாதன தர்ம அரசியலை முன்னெடுக்கும் கட்சிக்கு ,இவர்களையும் விட ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த முருகன் தலைவராகி சவாலாக திகழும் கால மாறுதலை கணக்கில் கொள்ள வேண்டும்.

இப்போதும் அதே உத்தியை தமிழ் நாட்டில் மீண்டும் பயன்படுத்தி ஜாதி அடையாள வட்டங்களுக்குள் தமிழர்களை நிறுத்த முயலும் அரசியல் இது.ஜாதிகளைக் கடந்து ஏற்படும் ஒருங்கிணைப்பை தடுக்கும் முயற்சியின் தொடர் விளைவாக சிறுபான்மை மதங்களின் ஒருங்கிணைப்பும் சாத்தியம் என்பதும் பழைய உத்தி தான். சட்ட மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருப்பதால் ஒரு அடியாளை பாதுகாக்க திரளும் எஜமானர்களைப் போல கூட்டணித் தலைவர்கள் திரள்கிறார்கள்.

இதுவும் இயல்பானது தான்! வியக்க இடமில்லாத வெளிப்படை அரசியல்!

நன்றி வசந்தபெருமாள் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...