பரூக், மெஹபூபா இந்தியாவில் வாழ உரிமையற்றவர்கள்

பரூக் அப்துல்லா, மெஹபூபாமுப்தி ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உட்பட ஆறு கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. ஜம்மு – காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து பெற்று தருவதற்காக இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக, அவர்கள் கூறி வருகின்றனர். இதற்கு தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தலைவராகவும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, துணைத்தலைவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, காஷ்மீர் கொடி, தேசியகொடி குறித்து மெஹபூபா முப்தி சர்ச்சைகருத்தை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்தியமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெஹபூபா முப்தி மற்றும் பரூக்அப்துல்லா ஆகியோர் இந்தியாவில் வாழ உரிமை இல்லாதவர்கள். அவர்களில் ஒருவர் சீனாவின் உதவியுடன், 370வது சட்டப்பிரிவை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம் என கூறுகிறார். சீனா, நம் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்தசூழலில் இதுபோன்ற பேச்சுகளை வெளியிடும் இவர்கள் சர்வதேச சமூகத்திற்கு என்ன செய்தியை கூறவருகிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...