நாடு முழுவதும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் நேற்று (31/10/2020) கொண்டாடப்பட்டது.
சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள அவரதுசிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைப்பிரிவினரின் அணிவகுப்புமரியாதையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “எதிர்க்கட்சியினர் அரசியல் செய்வதை நாட்டின் நலன்கருதி தவிர்க்க வேண்டும். புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்பு படையினர் செய்ததியாகத்தை பற்றி வருத்தப்படாமல் சிலர் அரசியல் செய்தனர். பயங்கரவாதத்துக்கு எதிராக உலகநாடுகள் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடையமுடியாது. ஒற்றுமையின் புதிய கோணத்தை இந்தியா உருவாக்குகிறது. காஷ்மீர் வளர்ச்சியின் பாதையில்செல்லும் நிலையில், வடகிழக்கு பகுதியில் அமைதி, வளர்ச்சி ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒரேஇந்தியா கனவை நிறைவேற்ற பாஜக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |