ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துபேசினார். அப்போது அவர் பேசியதாவது,

பசும்பொன்னில் 113வது தேவர் ஜெயந்தியில் கலந்துகொண்டு வணங்குவது ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. தன்னலமற்ற தேச பக்தியும், ஆன்மீக கொண்டவராக இருந்தவர் தேவர் திருமகனார். எந்த ஆண்டும் இல்லாதவகையில் இந்தாண்டு நேற்று நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வவழிபாடு இல்லாவிட்டாலும், திமுக தலைவர் ஸ்டாலின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வழங்கப்பட்ட விபூதியை கீழேகொட்டியது அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்டாலினுக்கு இறைவழிப்பாட்டு பழக்கம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை தெய்வ நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது. விருப்பம் இல்லாவிட்டால் ஸ்டாலின் மறுத்திருக்கலாம், அதைவிடுத்து உதாசீனம் படுத்த தேவையில்லை. பெரியாரைவிட கடவுள் மறுப்பை கொண்டவர் வேறுயாருமில்லை. அவரே ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திருநீறை இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பசும்பொன்னில் நிகழ்ந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்.

மருத்துவ படிப்புக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு தமிழகஆளுநர் உத்தரவு வழங்கியது பாராட்டதக்கது. டிசம்பர் 6 என்பது பாஜகவுக்கு புனித நாள். அந்ததினம் அம்பேத்கர் அவர்களுக்கு பிறந்த நாள் என்பதாலேயே வேல் யாத்திரையை முடிக்க உள்ளோம். வேல் யாத்திரையை எதிர்ப்பவர்களுக்கு அச்சம்வரத்தான் செய்யும். நாங்கள் தண்டிக்கப் போவதில்லை. நளினி, பேரறிவாளன் 7 பேர் விடுதலைக்கும் ஆளுநர் நல்லமுடிவை எடுப்பார்.

ரஜினி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ரஜினியின் அரசியல்வருகை பாதிக்கும் கட்சியினர் அவதூறாக அறிக்கையை சமூக வலைத்தளங்களில் பரப்பி இருக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக இரண்டு இலக்குதொகுதிகளில் வெற்றிபெறும் என்றார்.

One response to “ஸ்டாலின் மன்னிப்பு கேட்கவேண்டும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இ ...

இந்தியா வாழும் நாகரீகங்களின் இருப்பிடம் 1. 74ஆவது குடியரசுத் திருநாளை முன்னிட்டு, உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் ...

இடைதேர்தலில் பாஜக போட்டியிட வே ...

இடைதேர்தலில்  பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை ச ...

ஆவணபடம் நாட்டின் ஒருமைபாட்டை சீர்குலைக்கும் வேலை பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசி ஆவணபடத்துக்கு மத்திய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சிய ...

திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. திமுகவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியே பரவா இல்லை.. கோவில்களை ஒழுங்கா ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...