பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்துவருவதால், அக்., மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைவரி வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
கடந்த, எட்டுமாதங்களில் முதல் முறையாக, 1 லட்சம்கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.ஜிஎஸ்டி., வசூல் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்துக்கான, ஜி.எஸ்.டி., வசூல், 1.05 லட்சம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டு, அக்.,ல், 95 ஆயிரத்து, 379 கோடி ரூபாய் வசூலானது. அதனுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு, பிப்.,ல் 1.05 லட்சம்கோடி ரூபாயாக, ஜிஎஸ்டி., வசூல் இருந்தது. கொரோனா வைரஸ்பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதன் பிறகு, வரிவசூல் குறைந்தது.இந்நிலையில், கடந்த எட்டுமாதங்களில், தற்போது முதல் முறையாக, ஒருலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது, ஜிஎஸ்டி., வசூல்.பொருளாதார நடவடிக்கைகள் மீண்டுவருவதுடன், அதிக வளர்ச்சியை நோக்கி நகர்வதையே இதுகாட்டுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜி.எஸ்.டி., வருவாய், அக்டோபரில், 6,901 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டை ஒப்பிடும் போது, 13 சதவீதம் அதிகம்
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |