அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும்

அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கர மூர்த்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானி 1927ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரிக்கப்படாத இந்தியாவில் கராச்சியில்பிறந்தார். இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் இந்தியாவுக்குவந்தது.

அத்வானி நேற்று தன் 93-வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார். இதில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்துக்கு நேரில்சென்று வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அத்வானியை அவரது இல்லத்திற்குசென்று வாழ்த்தினர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொண்டர்களுக்கும் நாட்டுமக்களுக்கும் அத்வானி ‘வாழும் உத்வேகம்’ என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் அத்வானிக்கு பாரதரத்னா விருது வழங்க கோரி கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில் டி.எச்.சங்கரமூர்த்தி கூறியதாவது:

“உங்களுக்குத்தெரியும். லால் கிருஷ்ணா அத்வானி கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு வருபவர். ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனசங்கம் மற்றும் பாரதிய ஜனதாகட்சி ஆகியவற்றின் மூலம் தாய் நாட்டுக்காக அவர் செய்தசேவை, தியாகம் மற்றும் பங்களிப்பு ஒருதனித்துவமான விஷயம்.

அவரது தனிப்பட்ட மற்றும் பொதுவாழ்க்கையில் கறைபடியாமலும் நேர்மையாகவும், மிகவும் நம்பகத் தன்மை கொண்ட ஒரு தலைவராகவும் விளங்குகிறார். ஒரு தலைவராக தேசிய மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஏராளமான அறிவும் அனுபவமும் கொண்டவர். நாம் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளக் கூடிய அத்தகைய ஓர் உயர்ந்தமனிதராக அத்வானி திகழ்கிறார்.

அத்வானிக்கு பாரத்ரத்னா விருது வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் குறிப்பாக ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் தீவிர விருப்பமாகும். அவர் எல்லா வகையிலும் சிறந்தவர், சரியானவர், புகழ்பெற்றவர். கர்நாடகாவில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சார்பாக, அத்வானிக்கு பாரதரத்னா விருதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு டி.எச்.சங்கர மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...