எவ்வளவு கடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு சாதிக்கமுடியும்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் வடக்கு அவென்யூவில்  பி.ஆர். சாலையில் 3 அடுக்குமாடி கட்டிடங்கள் இப்போது ஒதுக்கீடு செய்யத் தயாராகியுள்ளன. கங்கா, யமுனா, சரஸ்வதி என்ற இந்தமூன்று கடடிடங்களின் சங்கமம், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆரோக்கியமான, மனநிறைவான, ஈடுபாடு நிறைந்த வாழ்க்கையை தரவேண்டும் என விரும்புகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கு உதவக்கூடிய அனைத்து  வசதிகள் இந்த அடுக்குமாடி வீடுகளில் செய்யப்பட்டுள்ளன. இது நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் இருப்பதால், எம்.பி.க்களுக்கு சௌகரிய மானதாக இருக்கும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தில்லியில் தங்குமிடவசதி செய்வது நீண்டகால பிரச்சினையாக இருந்துவந்தது. பிர்லா அவர்கள் இப்போது கூறியதைப் போல, நீண்ட காலமாக எம்.பி.க்கள் ஹோட்டல்களில் தங்கவைக்கப்படும் நிலைமை இருந்து வந்தது. அதனால் வீண் செலவுகள் ஏற்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அதில் மகிழ்ச்சி இல்லை. ஹோட்டலில் தங்கவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு, தீவிர முயற்சிகள் 2014-க்குப் பிறகு எடுக்கப்பட்டன. தசாப்த காலங்களாக இருக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதைவிட, தீர்வுகண்டால் தான் அவை முடிவுக்கு வரும். எம்.பி.க்களுக்கான வீடுகள் திட்டம் மட்டுமின்றி, டெல்லியில் பலதிட்டங்கள், பல ஆண்டுகளாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன.

இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட பல கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள், உரியகாலக்கெடுவுக்குள், சிலவற்றில் கெடுவுக்கு முன்னதாகவேகூட முடிக்கப் பட்டுள்ளன. அட்டல் பிகாரி வாஜ்பாயி அவர்கள் தலைமையிலான அரசு இருந்தபோது, அம்பேத்கர் தேசிய நினைவிடத்துக்கான ஆலோசனைகள் தொடங்கின. அதைக்கட்டுவதற்குப் பல ஆண்டுகள் ஆயின. இந்த அரசு அமைந்த பிறகுதான் அந்தப்பணிகள் நிறைவு பெற்றன. 23 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு  டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டுள்ளது. போர் நினைவுச்சின்னம் கட்ட வேண்டும் என்ற திட்டம் பல தசாப்தங்களாக யோசனையில் இருந்துவந்தது. நமது நாட்டின் துணிசல்மிக்க வீரர்கள் நீண்டகாலமாக இந்த கோரிக்கையை முன் வைத்து, எதிர்பார்த்திருந்தனர். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் நினைவாக இந்தியா கேட் அருகில் போர் நினைவுச்சின்னம் உருவாக்கும் வாய்ப்பு இந்த அரசுக்குக் கிடைத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். தேசிய காவலர்கள் நினைவுச் சின்னமும் இந்தஅரசால் கட்டப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வீடுகள் திறப்பும் அவசர மற்றும் முக்கியமான தேவையாக இருந்துவந்தது. எம்.பி.க்களின் நீண்டகால காத்திருப்பு இதன் மூலம் முடிவுக்குவருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டும்போது, சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சேமிப்பு நடவடிக்கைகள், சூரிய சக்தி மின் உற்பத்தி வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற, பசுமைக் கட்டடங்களுக்கான கோட்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதனால் இந்த அடுக்குமாடி வளாகம் அதிக நவீனத்துவம் பெற்றதாக இருக்கிறது.

இந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட மக்களவைத் தலைவர், மக்களவை செயலகம், நகர்ப்புறவளர்ச்சி அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களில் உள்ள அனைவருக்கும் நான் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில், இந்த நல்லவளாகத்தை உருவாக்கியதற்காக பாராட்டுகிறேன். தரம் மற்றும் சேமிப்பில் மக்களவை தலைவருக்கு அதிகஆர்வம் உண்டு என்பதை நாம் எல்லோரும் நன்றாக அறிந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் நேரத்தை மிச்சப்படுத்துவது, பயனுள்ளவிவாதங்கள் நடப்பதை உறுதி செய்வதில் அவர் கவனம் செலுத்துகிறார். இந்த கட்டுமானத்திலும் அதேஅக்கறையுடன் கூடிய நடவடிக்கைகள், உன்னிப்பாக அமல் செய்யப் பட்டுள்ளன. மழைக்கால கூட்டத் தொடரை நடத்தும்போது மக்களவைத் தலைவர் செயல்பட்ட விதத்தைப் பார்த்தோம்.

கொரோனா காலத்தில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது. ஆளும்கட்சி மற்றும் எதிர்க் கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு தருணத்தையும் நல்லமுறையில் பயன்டுத்திக் கொண்டார்கள். இருஅவைகளின் கூட்டத் தொடர்களை நடத்துவதற்கான மாற்று ஏற்பாடுகளில் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் நடத்தியதிலும் எல்லாகட்சியினரும் ஒத்துழைப்பு அளித்தனர்.

நமது நாடாளுமன்றத்தில் செயல்பாடு அதிகரித்ததற்கு இன்னொரு முக்கியகாரணமும் இருக்கிறது. ஒரு வகையில் அது 2014-ல் தொடங்கியது. அப்போது புதியபாதையில் பயணிக்க நாடு விரும்பியது, மாற்றத்தை விரும்பியது. அதனால் 300-க்கும் மேற்பட்டவர்கள் முதல் முறை எம்.பி.யாக வெற்றி பெற்றனர். முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த 17-வது மக்களவையிலும், 260 எம்.பி.க்கள் முதல்முறையாக வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது 400-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் முதல் முறையாக அல்லது இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார்கள். இது மட்டுமின்றி, அதிகபட்ச எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்களைத் தேர்வுசெய்த மக்களவையாகவும் 17-வது மக்களவை உள்ளது. இந்த இளமையான மனோபாவம், நாடாளுமன்ற செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது. இதனால்தான் செயல்பாட்டுப் பாணியிலும், நாட்டின் நிர்வாகத்திலும் புதிய அணுகுமுறை, புதியமனோபாவத்தை இன்றைக்கு காணமுடிகிறது. புதிய இந்தியாவை உருவாக்க நாடாளுமன்றம் புதிய நடவடிக்கை எடுப்பது, வேகமான முடிவுகள் எடுப்பதற்கும் இதுதான் காரணம். 16-வது மக்களவையில், அதற்கு முன்பிருந்ததைவிட 15 சதவீதம் அதிகமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 17-வது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடரில், குறிப்பிட்ட காலத்திற்குள் 135 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. மாநிலங்களவையும் 100 சதவீதம் செயல்பட்டது. கடந்த இருதசாப்த காலத்தில் இதுதான் மிக அதிகபட்ச செயல்பாடாகும். கடந்த குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவையின் செயல்பாடு 110 சதவீதத்தைவிட அதிகமாக இருந்தது.

நாடாளுமன்றத்தின் ஆக்கபூர்வமான, தரமான செயல்பாடுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம்செலுத்தினர். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தவகையில் புதிய உச்சத்தை தொட்டனர். சொல்லப்போனால், இந்த எம்.பி.க்களின் பங்களிப்பு நாடாளுமன்றத்துடன் நின்றுவிடவில்லை. நாம் எவ்வளவு சாதித்திருக்கிறோம் என்று பாருங்கள். ஒன்றுசேர்ந்து புதிதாகபலவற்றைச் செய்திருக்கிறோம். கடந்த ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் பார்த்தால், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்க நாம் செயல் பட்டிருக்கிறோம். தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் சட்டசீர்திருத்தங்களைச் செய்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களை நாட்டின் பிரதானப் பகுதியின் வளர்ச்சி மற்றும் சட்டங்களின் பாதையில் இணைக்க செயப்பட்டிருக்கிறோம். முதல் முறையாக ஊழலுக்கு எதிரான சட்டங்கள் ஜம்மு காஷ்மீரில் உருவாக்கப் பட்டுள்ளன.

இதற்கிடையில், அப்பாவி சிறுமிகளை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கும் நபர்களுக்கு மரணதண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி., திவால்நிலை அறிவிப்புக்கான விதிமுறைகள் குறித்த முடிவுகள் நவீன பொருளாதாரத்துக்கு வழிவகுத்துள்ளன. அதேபோல, இந்தியாவின்  அடையாளத்தை  உறுதிப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் குடிமக்கள் திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இவை உருவாக்கப்பட்டது மட்டுமன்றி, அமலாக்கத்திலும் செம்மையான நடைமுறைகள் கையாளப்பட்டுள்ளன. ஒருவேளை நிறைய பேர் இவற்றை கவனிக்காமல் போயிருக்கலாம். ஆனால் 16-வது மக்களவையில் 60 சதவீத மசோதாக்களை நிறைவேற்ற சராசரியாக 2 – 3 மணி நேரம் விவாதம் நடந்துள்ளது. முந்தைய மக்களவையைவிட அதிகமான மசோதாக்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அதேசமயத்தில் முன் எப்போதையும்விட அதிகநேரம் விவாதத்திருக்கிறோம்.

சட்டங்களை உருவாக்கவேண்டும், அதற்கான நடைமுறையை மேம்படுத்த வேண்டும் என்ற இரண்டு அம்சங்களிலும் நாம் கவனம் செலுத்தி இருப்பதை இது காட்டுகிறது. மாண்புமிகு எம்.பி.க்களான உங்களால் தான் இவை சாத்தியமாகியுள்ளன. இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொது நிகழ்ச்சியில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

பொதுவாக இளைஞர்கள் 10 முதல் 12-ஆம் வகுப்புவரை பயிலும், 16-17-18 வயது காலம்தான் இளமைப் பருவத்தில் முக்கியமானதாகக் கருதப்படும். எந்தவொரு இளம் ஜனநாயகத்துக்கும் இந்த 16-17-18 அதேஅளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இப்போது பாருங்கள், 2019 தேர்தல்கள் நடந்தபோது நாம் 16-வது மக்களவையின் பதவிக்காலத்தை நிறைவு செய்தோம். இந்த காலக்கட்டம் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கு வரலாற்று ரீதியில் மிகவும்முக்கியமானதாக இருந்தது. 17-வது மக்களவையின் பதவிக்காலம் 2019-க்குப் பிறகு தொடங்கியது. இந்த மக்களவையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுத்து, நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இதன்பிறகு 18-வது மக்களவை உருவாகும். புதிய தசாப்தத்திற்கான பயணத்தில் 18-வது மக்களவையும் முக்கிய பங்கு வகிக்கும் என்று திடமாக நம்புகிறேன். இந்த 16-17-18-ன் முக்கியத்துவத்தை உங்கள் முன் வைத்திருக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் நாம் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. தற்சார்பு இந்தியா திட்டமாக இருந்தாலும், பொருளாதாரம் தொடர்பான இலக்குகளாக இருந்தாலும், இதுபோன்ற வேறுமுடிவுகளாக இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியில் இந்த காலக்கட்டம் பொன்னான காலமாக நினைவில் வைக்கப்பட வேண்டும்.

இன்றைக்கு நமக்கு ஆதாரவளங்கள் இருக்கின்றன, தீர்க்கமான உறுதியும் இருக்கிறது. நமது உறுதியில் எவ்வளவுகடினமாக உழைக்கிறோமோ அந்த அளவுக்கு விரைவாக, பெரியதாக சாதிக்கமுடியும். நாட்டு மக்கள் 130 கோடி பேரின் கனவுகளை நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றுவோம், தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவோம் என்பதில் நிச்சயமான நம்பிக்கை இருக்கிறது. இந்த நல்வாழ்த்துகளுடன், மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

டில்லியில், டாக்டர் பி.டி.மார்க் என்னும் இடத்தில், பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கான, 80 ஆண்டுகள் பழமைவாய்ந்த, எட்டு பங்களாக்கள் இடிக்கப்பட்டு, அங்கே, மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளன. அதில், 76 புதிய வீடுகள் அமைந்துள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை, பிரதமர் நரேந்திரமோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று திறந்து வைத்து பேசியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...