சீர்திருத்தங்கள் எதிர்காலத்திலும் தொடரும்

தற்போதைய பெருந்தொற்று காலத்திலும் சீர்திருத்தங்கள் உத்வேகத்துடன் மேற்கொள்ள பட்டதாகவும், இவை எதிர்காலத்திலும்தொடரும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியதொழில் கூட்டமைப்பான சிஐஐ ஏற்பாடு செய்திருந்த தேசிய பன்னாட்டு நிறுவனங்கள் மாநாடு 2020-இல் கலந்துகொண்டு பேசியவர் இதனைத் தெரிவித்தார்.

அரசின் பங்குகளை விற்பனைசெய்தல் மற்றும் நிதித்துறையை மேலும் செம்மையாக்குவது உள்ளிட்டவை குறித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். “அனைத்து தொழில் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள், பெரிய, நடுத்தர மற்றும் சிறியநிறுவனங்கள் ஆகியவை வர்த்தகத்தை மேற்கொள்வதில் மீட்டமைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவை முதலீட்டுக்கு உகந்தநாடாக மாற்றுவதற்குத் தேவையான சரியான கொள்கைகள் உருவாக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்”, என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.

தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ் அரசு அறிவித்துள்ள சீர்திருத்தங்களின்படி அணுசக்தி மற்றும் விண்வெளி உள்ளிட்ட 9 துறைகளில் அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்களினால் இந்தியா தனது உள்நாட்டுபோட்டி மனப்பான்மையை அதிகப்படுத்தி, உலக வர்த்தகத்தின் ஓர் முக்கிய அங்கமாக உருவாகும் என்று அவர் விளக்கம் அளித்தார்.

இந்தியாவுக்கு வெளியில்இருந்து செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

பிரதமர் நரேந்திரமோடி நேரடியாக பன்னாட்டு நிறுவனங்களுடன் உரையாடி அவர்களது பிரச்சினைகள் குறித்து கேட்டுவருகிறார். அரசின் சீர்திருத்தங்கள் மற்றும் வரி சலுகைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிதியகங்கள் தேசியகட்டமைப்புத் திட்டங்களில் அரசுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...