தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பை மத்தியவேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.
இணையம் மூலமாக நடத்தப்பட்ட இந்தநிகழ்ச்சியில், புதிய தேன்விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் நாடுமுழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து பேசிய அமைச்சர், “இந்தியாவில் தேனீ வளர்ப்பு என்பது கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும்பாலும் அமைப்பு சாராதொழிலாக விளங்கி வருகிறது. நமது நாட்டில் தேன் உற்பத்திக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கும் போதிலும், தேனீ வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடையாமல் உள்ளது,” என்றார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறுவிவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் லட்சியத்தை அடையஉதவும் என்று தோமர் மேலும் தெரிவித்தார்.
‘10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு’ என்னும் திட்டத்தின்கீழ், தேன்விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |