விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளது

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணைஅமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோர் புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் 2020 டிசம்பர் 1 அன்று உரையாடினார்.

வேளாண் சீர்திருத்த சட்டங்களின் பலன்கள்குறித்து விவசாய சங்கங்களுக்கு  அமைச்சர்கள் மீண்டும் விளக்கினார்கள். வேளாண் சீர்திருத்த சட்டங்கள் குறித்த பல்வேறு விஷயங்கள்குறித்து சுமூகமான சூழ்நிலையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பஞ்சாபை சேர்ந்த விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை அன்புடன்வரவேற்ற வேளாண் அமைச்சர்,  விவசாயிகளின் நலனை பாதுகாக்க அரசு உறுதியாக உள்ளதென்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே தயாராக உள்ளதென்றும் தெரிவித்தார்.

வேளாண்துறையின் வளர்ச்சி எப்போதுமே இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்திருக்கிறது என்று அமைச்சர் கூறினார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிபுணர் குழுவொன்றை அமைக்கலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்காக அரசோடு இன்னொரு கட்டபேச்சுவார்த்தையில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்துகொள்வார்கள் என்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...