மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரவையில் திமுக அரசு கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புதெரிவித்து அதிமுக, பாஜக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அரசின் இந்த தீர்மானத்து எதிர்ப்புதெரிவித்து பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இவர்களை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு எதிர்ப்புதெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், வேளாண் மக்கள் வாழ்வு மேம்படைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு புதிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை மாநில அரசு உள்நோக்கத்தோடு எதிப்பு தெரிவித்து, அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. எனவே அந்ததீர்மானத்தை எதிர்த்து நாங்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |